எஸ்.ஜே.சூர்யாவுக்கு டாக்டர் பட்டம் வழங்கிய வேல்ஸ் பல்கலைக்கழகம்
ஒரு காலத்தில் முன்னணி டைரக்டர்கள் லிஸ்டில் இருந்த எஸ் ஜே சூர்யா தற்பொழுது நடிகராக கலக்கிக் கொண்டிருக்கிறார். பல படங்கலில் வில்லன் னாகவும், கௌரவ தோற்றத்திலும் கலைக்கி வரும் இவர் டைரக்டர் சங்கர் இயக்கத்தில் எஸ் ஜே சூர்யா நடித்த கேம் சேஞ்சர் படம் பொங்கல் ரிலீஸ் ..இக்கு தயாரா ஆக உள்ளது.
தற்போது இவருக்கு வேல்ஸ் பல்கலைக்கழகம் சார்பாக கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி உள்ளது. இது குறித்து மகிழ்ச்சியை வெளியிட்ட sj சூர்யா கேம் சேஞ்சர் படத்தை தொடர்ந்து இந்தியன் 2 படம் விரைவில் வெளியாக உள்ளதாகவும் கேம் சேஞ்சர் படத்தின் வெற்றி இந்தியன் திரைப்படத்தையும் வெற்றியாகும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. ஷங்கர் ஒரு உழைப்பாளி அவர் உழைப்பு வீணாகாது. இந்த பட்டம் தன்னுடைய உழைப்பிற்கும் கிடைத்த பரிசு என்றும் இதை நான் சந்தோஷமாக ஏற்றுக்கொள்கிறேன் .
தன்னிடம் நல்ல குணம் உள்ளதா? நான் அறிவாளியா? முட்டாளா? என்பதெல்லாம் தனக்கு தெரியாது ஆனால் என்னுடைய உழைப்பிற்கு நான் உண்மையாக இருப்பேன் என்று தெரிவித்துள்ளார். விரைவில் எஸ் ஜே சூர்யா கில்லர் படத்தில் மீண்டும் இயக்குனராகிறார். இவர் தற்பொழுது வில்லனாக நடிப்பதற்கு மட்டும் 12 கோடி ரூபாய் சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது.