வைரலாகும் கீர்த்தி சுரேஷ் Invitation
கீர்த்தி சுரேஷ் தனது 15 வருட காதலரான ஆண்டனி தட்டில் என்பவரை டிசம்பர் 12ஆம் தேதி கோவாவில் திருமணம் செய்யயுள்ளார்.
சமூக ஊடகங்கள் முழுவதும் வைரலாகிவிட்ட அழைப்பிதழால், திருமண தேதி டிசம்பர் 12 என உறுதியானது.
கீர்த்தி சுரேஷ் மற்றும் ஆண்டனி தட்டில் திருமணம் இந்து மற்றும் கிறிஸ்தவ முறை படி நடக்கும். கீர்த்தி உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் போது, கொச்சியில் பட்டப்படிப்பைத் தொடர்ந்த ஆண்டனியை சந்தித்த போது காதலிக்க தொடங்கினார்.
கடந்த 15 ஆண்டுகளாக வலுவான உறவில் இருந்தாலும் தங்களது காதலை ரகசியமாக வைத்திருந்தனர்.