மன்சூர் அலிகான் மகன் அதிரடி கைது
கஞ்சா வியாபாரிகளுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறி நடிகர் மன்சூர் அலிகானின் மகன் உட்பட மேலும் 7 இளைஞர்களை நகர போலீஸார் புதன்கிழமை கைது செய்து 4 கிராம் கஞ்சா பறிமுதல் செய்தனர்.
மன்சூர் அலிகான் மகன் திடீரென்று கைது செய்யப்பட்டது திரை உலகில் பரப்பரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சென்னை போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவின் பேரில் ஜே ஜே நகர் பாரிசாலையில் சந்தேகத்திற்கு இடமாக உலாவைக் கொண்டிருந்த வாலிபர்களை மடக்கி சோதனை செய்தபோது அவர்களிடம் போதை பொருட்கள் இருப்பது தெரியவந்தது விசாரணையில் அவர் பெயர் கார்த்திகேயன் என்பது தெரியவர அவர் கொடுத்த தகவலின் படி மேலும் பல இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.
அவர்கள் அனைவரும் தனியார் கல்லூரி மாணவர்கள் என்பது தெரியவந்துள்ளது. செல்போனில் அறிமுகமாகி போதை பொருளை கடத்தி பயன்படுத்துகிறார்கள். மேலும் ஏழு பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களில் ஒருவர் மன்சூர் அலிகான் மகன் துக்ளக். இவர் பிஎஸ்சி பட்டப்படிப்பு முடித்த பிறகு சினிமாவில் உதவி இயக்குனராக பணியாற்றி வருகிறார், ஒரு படத்தில் கதாநாயகனாகவும் நடித்திருக்கிறார்.
இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நிதிபதியின் உத்தரவின் பெயரில் இவர்களை புழல் சிறையில் அடைத்தனர். தன் மகனை பார்க்க மன்சூர் அலிகான் சிறைச்சாலைக்கு சென்று இருக்கிறார். கானின் மகன் அலிகான் துக்லக் நேரடியாக வியாபாரத்தில் ஈடுபடவில்லை, ஆனால் வழித்தடமாகச் செயல்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.