in

டெல்லியில் பிரதமர் உட்பட அமைச்சர்கள் சினிமா பார்த்துகொண்டிருக்கின்றனர் என தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார்

திருவண்ணாமலை,விழுப்புரம் போன்ற இடங்களில் மழை வெள்ள பாதிப்பு ஏற்பட்டு 26 பேர் வரை உயிரிழந்ததாக தகவல் இருக்கும் நிலையில் டெல்லியில் பிரதமர் உட்பட அமைச்சர்கள் சினிமா பார்த்துகொண்டிருக்கின்றனர்.

குஜாரத்தில் நடந்த அநீதியை ஆவண படமாக எடுத்து பார்ப்பதில் ஆர்வம் இருக்கும் நிலையில் வெள்ள பாதிப்புக்கு ஒரு டிவிட் கூட போட்டு அனுதாபம் தெரிவிக்கவில்லை என தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

நெல்லையில் நேரு யுவகேந்திர சார்பில் நடந்த இளைஞர் கலைவிழா நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு கலந்துகொண்டு பரிசுகளை வழங்கினார்.முன்னதாக செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர், கடந்த ஆண்டு திருநெல்வேலி தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் பெய்த கனமழை பாதிப்புகளை ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட மத்திய குழுவினர் வந்து பார்வையிட்டனர் ஆனால் இதுவரை எந்த நிதியும் வழங்கப்படவில்லை.

அக்டோபர் 1ம் தேதி இந்திய அளவில் 14 மாநிலங்களுக்கு புயல் வெள்ளம் பாதிக்கப்பட்டது தொடர்பாக தேசிய பேரிடர் நிவாரண நிதி வழங்கப்பட்டது. குஜராத் மாநிலத்திற்கு 600 கோடி ரூபாயும், மகாராஷ்டிரா மாநிலத்திற்கு 1492 கோடி, ஆந்திராவிற்கு 1200 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. ஆனால் தமிழகத்திற்கும், கேரளாவிற்கும் தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ஒரு பைசா கூட வழங்கப்படவில்லை. தமிழகம் கேரளா தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டு வருகிறது.

எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இன்னும் நிதி ஒதுக்கப்படவில்லை, மெட்ரோ இரண்டாம் கட்ட திட்டத்திற்கும் இதுவரை நிதி ஒதுக்கப்படவில்லை, அனைவருக்கும் கல்வித் திட்டத்திலும் இதுவரை ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை, தமிழகத்தை சேர்ந்தவர் தான் நிதி அமைச்சராக இருக்கின்றனர், தொடர்ந்து தமிழகத்தை ஏன் வஞ்சிக்கின்றனர் என செய்தியாளர்கள் தான் அவர்களிடம் கேள்வி எழுப்ப வேண்டும், தமிழகத்தில் தற்போது ஃபெஞ்சல் புயல் காரணமாக மிகப்பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

திருவண்ணாமலை விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் மழை வெள்ளத்தால் 26 பேர் வரை உயிரிழந்திருக்கிறார்கள் என தகவல்கள் வெளியாகி உள்ளது இந்த நிலையில் பாரத பிரதமர் மத்திய அமைச்சர்கள் சினிமா பார்த்துக் கொண்டிருக்கின்றனர் என்பதையும் செய்திகள் சொல்கிறது. முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலத்தில் குஜராத் பகுதியில் நடந்த அநீதியை ஆவண படமாக எடுத்து பார்க்கும் ஆர்வம் தமிழகத்தில் மக்கள் பாதிக்கப்பட்டதற்கு ட்வீட் செய்து கூட அனுதாபம் தெரிவிக்க வரவில்லை. தமிழக முதலமைச்சர் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வெள்ள பாதிப்பு ஏற்படுவதற்கு முன்பே மக்களுக்கான நிவாரண பொருட்கள் வழங்கி நிவாரண முகங்களில் தங்க வைத்தார்கள். அதிமுக ஆட்சி காலத்தில் எந்த ஒரு முன்னறிவிப்பும் இல்லாமல் செம்பரம்பாக்கம் ஏரி திறந்து விடப்பட்டது. சாத்தனூர் ஏரி எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் திறந்து விடப்பட்டதாக சொல்கிறார்கள் ஐந்து முறை நீர்வளத்துறை மூலம் அறிவிப்புகள் வெளியிடப்பட்டது என தெரிவித்தார்.

What do you think?

நினைவு தினத்தையொட்டி சட்டப்பேரவையில் முதலமைச்சர் ரங்கசாமி மரியாதை 

நெல்லையில் நேரு யுவகேந்திரா சார்பில் மாவட்ட அளவிலான கலைப் போட்டிகள் நடைபெற்றது