அண்ணாமலையார் கோவிலுக்கு சென்னையிலிருந்து கொண்டு வரப்பட்ட திருக்குடைக்கு செஞ்சியில் சிறப்பு பூஜை.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் திருவள்ளுவர் மாவட்டம் ஞாயிறு கிராமம் ஸ்ரீ புஷ்பரதேஸ்வரர் ஆலயத்தில் இருந்து சுமார் 1,50,000 மதிப்பில் நான்கு குடைகள் சென்னை சேலையூர் திருவாசக முற்றோதுதல் பாடகர் சீனிவாச அய்யா,அகில பாரத சன்னியாசிகள் சங்கம் நதிகளின் ஒருங்கிணைப்பாளர் அன்னை நாணேஸ்வரி கிரி இவர்களின் தலைமையில் 200க்கும் மேற்பட்ட சிவனடியார்கள் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் தீப திருவிழாவிற்கு சமர்ப்பணம் செய்வதற்காக சென்னையில் இருந்து கொண்டு வரப்பட்டது திருவள்ளூர் மாவட்டம் ஞாயிறு கிராமம் ஸ்ரீ புஷ்பவர்தேஸ்வரர் ஆலயத்தில் சுமார் 114 ஆண்டுகளுக்கு முன் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு தீப திருவிழாவின் போது இந்த கோவில் சார்பாக திருக்குடைகள் வழங்கப்பட்டு வந்ததாகவும் இடைப்பட்ட ஆண்டுகளில் நிறுத்தப்பட்ட திருகுடைகள் இந்த ஆண்டு மீண்டும் வழங்குவதற்காக திருக்கோவிலின் நிர்வாகிகள் மற்றும் சிவனடியார்கள் ஒன்று சேர்ந்து திருக்குடைகள் வாங்கப்பட்டு அண்ணாமலையார் கோவிலுக்கு சென்னையில் புறப்பட்ட திருக்குடைகள் அதன் வழியாக வேளச்சேரி தண்டீஸ்வரர் ஆலயம், பள்ளிக்கரணை வராகி திருக்கோவில் கேம்ப் ரோடு ஸ்ரீ வரசித்தி விநாயகர், ஸ்ரீ வைத்தியநாதசுவாமி ஆலயம், வண்டலூர் வழியாக ஊரப்பாக்கம் ஊரணீஸ்வரர் ஆலயம் மறைமலைநகர் ஐயப்பன் திருக்கோவில்,திருக்கழுக்குன்றம் அருள்மிகு வேதகிரீஸ்வரர் கோவில், கருங்குழி அருள்மிகு ஞானகிரீஸ்வரர் கோவில், மதுராந்தகம் ஏரி காத்த ராமர் கோவில், சிறு நாகலூர் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவில், அச்சரப்பாக்கம் ஆட்சீஸ்வரர் கோவில் திண்டிவனம் அருள்மிகு திந்தீஸ்வரர் கோவில் போன்ற கோவிலில் பூஜை செய்யப்பட்ட திருக்குடைகள் செஞ்சி பீரங்கிமேடு அருள்மிகு ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு பூஜைக்காக வருவதை அறிந்து கோவிலின் நிர்வாகிகள் மேளதாளங்கள் சிவவாத்தியங்களுடன் திருக்குடைகளுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டு சிவ வாத்தியங்கள் முழங்க அருணாச்சலேஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு வழி அனுப்பி வைக்கப்பட்டது.
செஞ்சிக்கு வருகை புரிந்த திருக்குடைகள் வரவேற்பு நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர் கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
மேலும் செஞ்சியில் இருந்து புறப்பட்ட திருக்குடைகள் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிவனடியார்களுடன் திருவண்ணாமலை கிரிவலம் சுற்றி, அண்ணாமலையார் கோவில் மாட வீதிகள் சுற்றி வரப்பட்டு மாலை கோவில் அதிகாரிகளிடம் வழங்கப்பட்டது.