நாமக்கல் நகர் சாய்பாபா ஆலயத்தில் குரு வியாழக்கிழமை முன்னிட்டு சிறப்பு பூஜை மங்கள ஆர்த்தி – வெளிநாட்டு பக்தர்கள் உட்பட ஏராளமானவர்கள் தரிசனம்
நாமக்கல் நகர் திருச்சி சாலை இந்திரா நகரில் உள்ள ஸ்ரீ சாய் தத்தா பிருந்தாவன் சாய்பாபா ஆலயத்தில் கார்த்திகை மாத குரு வியாழக்கிழமை தினத்தை முன்னிட்டு இங்குள்ள பாபாவிற்கு காலை பால் தயிர் மஞ்சள் அபிஷேகமும் பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மங்கள ஆர்த்திகாண்பிக்கப்பட்டது.
பின் வண்ண நறுமலர்கள் கொண்டு பாபா பாதத்தில் புஞ்சாஞ்சலி சமர்பிக்கப்பட்டு பின்னர் நிறைவாக மஹா மங்கள ஆர்த்தி காண்பிக்கப்பட்டது. இதில் ஹாங்ஹாங் நாட்டை சேந்தவர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்துபின் பக்தர்கள் வரிசையில் நின்று பாபாவை தரிசனம் செய்தனர்.இதில் ஏராளாமான பக்தர்கள் தரிசனம் பெற்றனர் வருகை புரிந்த பக்தர்களுக்கு ஹாங்ஹாங் பக்தர்கள் அன்னதானம் வழங்கி சிறப்பித்தனர்.