எப்போதும் பரபரப்பாக காணப்படும் வத்தலக்குண்டு காளியம்மன் கோவில் அருகே தாருமாறாக ஓடிய அரசு பேருந்து மோதியதில் சாலையோரத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் உடல் நசுங்கி பலி, மூன்றுபேர் படுகாயம் காவல்துறையினர் விசாரணை
திண்டுக்கல் மாவட்டத்தில் மதுரை – கொடைக்கானல், பெரியகுளம் மற்றும் திண்டுக்கல் – கொடைக்கானல்,தேனி குமுளி என முக்கிய சாலைகளின் சந்திப்பாகவும்,எப்போதும் பரபரப்பாகவும் திகழும் வத்தலக்குண்டு நகர் பகுதியில் உள்ள காளியம்மன் கோவில் அருகே பஸ்நிலையதிலிருந்து தெப்பத்துப்பட்டி சென்ற அரசு நகர பேருந்து தாறுமாறாக ஓடி சாலையோரத்தில் உள்ள பலர் மீது பலமாக மோதியது இதில் இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் ஒருவர் தலைநசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தார்.
இறந்தவர் திருச்சியைச் சேர்ந்த நந்தகுமார் வயது 24 என்பது தெரியவந்துள்ளது. மேலும் இதே போல சாலையோரத்தில் நடந்து சென்ற மற்றொரு மூதாட்டி அழகாபுரியைச் சேர்ந்த பாண்டியம்மாள் வயது 62 மீதும் பஸ் மோதியதில் அவர் கால் நசுங்கி படுகாயம் அடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த நேரத்தில் மேலும் சிலர் காயம் அடைந்துள்ளனர்,
எப்போதும் பரபரப்பாக காணப்படும் நகரில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள சாலையில் பழுதடைந்த அரசு பேருந்து தாறுமாறாக ஓடி மோதியதில் பரிதாபமாக இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதும்,பலர் காயமடைந்ததும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது உடனடியாக வத்தலகுண்டு காவல்துறை ஆய்வாளர் சிலைமணி தலைமையில் சார்பாக ஷேக் அப்துல்லா மற்றும் போலீசார் விரைந்து சென்று நந்தகுமார் பிரதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர் படுகாயம் அடைந்த பாண்டியமாளை திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு தீவிர சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர். இந்த சம்பவம் வத்தலகுண்டு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.