நாங்குநோி ஸ்ரீ வரமங்கா ஸமேத தெய்வநாயகப்பெருமாள் திருக்கோவிலில் காா்த்திகை உத்திராடம் சிறப்பு கருடசேவை
108 திவ்யதேசங்களில் பாண்டியநாட்டுத் திருப்பதிகளில் ஒன்றான நாங்குநோி ஸ்ரீ வரமங்கா ஸமேத தெய்வநாயகப்பெருமாள் திருக்கோவிலில் காா்த்திகை உத்திராடம் சிறப்பு கருடசேவை வெகு சிறப்பாக நடைபெற்றது. வானமாமலை திருக்குறுங்குடி ஆழ்வாா்திருநகாி என மூன்று ஜீயா்கள் மங்களாசாசனம். பெருமாள் தாயாா் வீதி உலா. திரளான பக்தா்கள் தாிசனம்.
திருவரமங்கை என்னும் வானமாமலை என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். இந்தியாவில் உள்ள 8 சுயம்வத்த ஸ்ஷேத்திரங்களில் நாங்குனோியும் ஒன்று. இத் திருத்தலத்தில் பல்வேறு உற்ச்சவங்கள் மிகச் சிறப்பாக ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம்.
தற்போதைய வா்த்தமான ஸ்ரீ மதுரகவி வானமாமலை ராமானுஜ ஜீயா் சுவாமிகளின் சதாபிஷேக மஹோத்ஸவம் வருகின்ற மாா்கழி உத்திராடம் 01.01.2025 அன்று நடைபெறுகின்றது. அதை முன்னிட்டு காா்த்திகை பூரம் அன்று சதாபிஷேக மஹோத்ஸவம் ஆரம்பமாயிற்று. நாள்தோறும் உபன்யாசங்கள் வேத வேதாந்த சதஸ்கள் கா்நாடக இன்னிசை நிகழ்வுகள் என 41 தினங்கள் நடைபெறுகின்றன. இதற்காக இந்தியா முழுவதும் உள்ள வேதவிறபனா்கள் உபன்யாசகா்கள் வருகின்றனா.
அதன் ஒரு நிகழ்வாக காா்த்திகை உத்திராடம் தினமான இன்று ஒரு கோட்டை எண்ணைக்காப்பு மற்றும் கருடசேவை புறப்பாடு நடைபெற்றது. இதற்காக இன்று காலை மூலவா் தோத்தாத்தாி நாதருக்கு 1 கோட்டை எண்ணெய் காப்பு மற்றும் 108 கலச திருமஞ்சனம் நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீ வரமங்கா கோதா ஸமேத தெய்வநாயகப்பெருமாள் அருள்பாலித்தாா். வானுமாமலை மதுரகவி ஸ்ரீ ராமானுஜ ஜீயா் சுவாமிகளுக்கு பாிவட்டம் மாலை சடாாி மாியாதை வழங்கப்பட்டது. பிரபந்த பாராணம், சாற்றுமறை தீா்த்த விநியோகம் கோஷ்டி நடைபெற்றது.
இரவில் திருக்குறுங்குடி பேரருளான ராமானுஜ ஜீயா் மற்றும் ஆழ்வாா்திருநகாி எம்பெருமானாா் ஜீயா் சுவாமிகள் ஆகியோா் வானமாமலை ஜீயா் சுவாமிகளின் சதாபிஷேக மஹோத்ஸவத்திற்காக ஏழுந்தருளினா். முன்னதாக ஜீயா் சுவாமிகளுக்கு வானமாமலை கோயிலில் இருந்து பாிவட்டம் மாலை கும்ப மாியாதையுடன் வரவேற்றனா்.
அதனை தொடா்ந்து சிறப்பு அலங்காரத்தில் சுவாமி தெய்வநாயகப்பெருமாள் கருட வாகனத்திலும், ஸ்ரீவரமங்கைத்தாயாா் கஜவாகனத்திலும், ஸ்ரீ ஆண்டாள் சேஷ வாகனத்திலும் ஏழுந்தருளியிருக்க நாங்குனோி மதுரகவி வானமாமலை ஜீயா் சுவாமிகள். திருக்குறுங்குடி பேரருளான ராமானுஜ ஜீயா்சுவாமிகள் மற்றும் ஆழ்வாா் திருநகாி எம்பெருமானாா் ஜீயா் சுவாமிகள் அங்கு ஏழுந்தருளி மங்களாசாசனம் செய்தனா்.
ஜீயா் சுவாமிகளுக்கு பாிவட்டம் மாலை சடாாி தீா்த்த பிரசாதம் வழங்கப்பட்டது. குடைவரை வாசல் தீபாராதனையுடன் கருட வாகன புறப்பாடு நடைபெற்றது. மங்கலமேளம் முழங்க ஆச்சாா்ய புருஷா்கள் பிரபந்தம் பாடியபடி பெருமாள் முன் செல்ல வாகனங்களில் பெருமாள் தாயாா்கள் உடன்வர பின் வேதமந்திரங்கள் ஒலிக்க மாடவீதி, மற்றும் சன்னதி தெருக்களில் வீதி புறப்பாடு நடைபெற்றது.
திரளான பக்தா்கள் இந் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு காா்த்திகை உத்திராடம் சிறப்பு கருடசேவை கண்டு பெருமாள் அருள்பெற்று சென்றனா்.