நாமக்கல் வாராஹி அம்மன் கோவிலில் 108 சங்காபிஷேகம்
கார்த்திகை மாத வளர்பிறை பஞ்சமி திதியை முன்னிட்டு நாமக்கல் வாராஹி அம்மன் கோவிலில் 108 சங்காபிஷேகம்!
நாமக்கல் நகர்- இரயில் நிலையம் அருகில் தங்காயி மற்றும் ஸ்ரீ வாராஹி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மாதந்தோறும் வளர்பிறை மற்றும் தேய்பிறை பஞ்சமி திதி அன்று சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் / யாகம் நடைபெறும்.
இதையொட்டி கார்த்திகை மாத வளர்பிறை பஞ்சமி திதியை முன்னிட்டு நேற்று மாலை 6 மணிக்கு மேல் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர்
மாலை 7 மணியளவில் 108 சங்காபிஷேகம் மற்றும் வாராஹி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்றது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேங்காய் தீபம் ஏற்றி வழிபட்டு சென்றனர்.