யோக பைரவருக்கு சம்பக சஷ்டி விழா முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள்
திருப்பத்தூர் அருள்மிகு ஶ்ரீ திருத்தளிநாதர் திருக்கோவிலில் யோக பைரவருக்கு சம்பக சஷ்டி விழா முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் நகர் மையப்பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ சிவகாமி அம்பாள் சமேத ஸ்ரீ திருத்தளிநாதர் திருக்கோவிலில் யோக பைரவருக்கு சம்பக சஷ்டி விழா முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
இத்திருக்கோவிலில் தனி சன்னதி கொண்டு பைரவர் யோக பைரவர் ஆக அருள்பாலித்து வருகிறார் சம்பக சஷ்டி விழா கடந்த ஒன்றாம் தேதி அன்று துவங்கி நடைபெற்று வருகிறது ஆறு நாட்கள் நடைபெறும் விழாவின் ஒரு நிகழ்வாக மூலவர் பைரவருக்கு திருமஞ்சன பொடி மஞ்சள் பால் தயிர் பஞ்சாமிர்தம் சந்தனம் பன்னீர் உள்ளிட்ட பல வகையான நறுமண திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன.
தொடர்ந்து சிறப்பு அலங்காரம் நடைபெற்று தீப ஆராதனை காண்பிக்கப்பட்டன இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பைரவர் சுவாமிக்கு அர்ச்சனைகள் செய்து வழிபட்டனர்.