இரண்டாவது போயஸ் கார்டனின் புயலே !! ரஜினிகாந்தின் பிறந்த நாளை ஒட்டி ரசிகர்கள் ஒட்டிய போஸ்டர்
நடிகர் ரஜினிகாந்தின் பிறந்த நாள் எதிர்வரும் 12ஆம் தேதி அன்று அவரது ரசிகர்கள் கொண்டாடப்பட உள்ள நிலையில் மதுரையில் உள்ள அவரது ரசிகர்கள் மதுரை முக்கிய பகுதிகளில் போஸ்டர் ஒன்றை ஒட்டியுள்ளார்கள் அதில்
2026 இல் தமிழக அரசியலில் பீனிக்ஸ் பறவை போல மையம் கொள்ளும் இரண்டாவது போயஸ் கார்டனின் புயலே !!
என்ற வாசகம் பொறிக்கப்பட்ட போஸ்டர் உள்ளது அதில்
மேடையில் ரஜினி பேசுவது போன்ற புகைப்படத்தின் பின்னணியில் மறைந்த ஜெயலலிதா எம்ஜிஆர் அண்ணா காமராஜர் காந்தி உள்ளிட்டோரி புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன
மதுரை மாநகர் மாவட்ட ரஜினிகாந்த் தலைமை ரசிகர் மன்றத்தின் சார்பாக மதுரை முக்கிய பகுதிகளில் அவரது ரசிகர்கள் இந்த போஸ்டரை ஒட்டி உள்ளனர்