சிதம்பரம் அருகே மர்மமான முறையில் வாய்க்காலில் இறந்து கிடந்த மாற்றுத்திறனாளி. கிராம மக்கள், உறவினர்கள் சிறிது நேரம் திடீர் சாலை மறியல். போலீசார் விசாரணை
சிதம்பரம் அருகே உள்ள செங்கல்மேடு கிராமத்தைச் சேர்ந்தவர் மோகன்(38). மாற்றுத்திறனாளியான இவர் இரு சக்கர வாகனங்களை பழுது பார்க்கும் வேலை செய்து வந்தார். இன்று மோகன் சிதம்பரம் அருகே து.மண்டபம் கிராமத்தில் உள்ள ஒரு வாய்க்காலில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
இந்நிலையில் மோகன் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், இவர் கொலை செய்யப்பட்டு இருப்பதாகவும் கூறி அப்பகுதி கிராம பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது மரண சம்பவத்தில் முறையான விசாரணை நடத்தி உண்மையை கண்டறிய வேண்டும் எனவும் முழக்கமிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சிதம்பரம் தாலுகா போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். பின்னர் போலீசார் இறந்து கிடந்த மாற்றுத்திறனாளி மோகனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவரது குடும்பத்தினர் மற்றும் கிராம மக்கள்
இறந்த மாற்றுத்திறனாளி மோகனின் சாவில் சந்தேகம் இருக்கிறது. அதனால் இதுகுறித்து காவல்துறை உரிய விசாரணை நடத்த வேண்டும் என கூறிய கிராம மக்கள், இறந்த மாற்றுத்திறனாளி மோகனின் குடும்பத்திற்கு தமிழ்நாடு அரசு நிவாரண நிதி அளிக்க வேண்டும் எனவும் கூறினர்.