சந்தியா திரையரங்கில் உயிரிழந்த குடும்பத்திற்கு 25 லட்ச கொடுத்த நடிகர் அல்லு அர்ஜுன்
39 வயதான ரேவதி, அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா 2: தி ரூல்’ படத்தின் Premier Show …விற்கு புதன்கிழமை இரவு 9:30 மணியளவில் ஹைதராபாத் ஆர்டிசி கிராஸ்ரோடில் உள்ள சந்தியா திரையரங்கில் அவரது கணவர் பாஸ்கருடன் (9) வயது மகன் ஸ்ரீதேஜை அழைத்துச் வந்துள்ளார்.
தியேட்டரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் ரேவதி உடல் நசுங்கி உயிரிழந்தார். தியேட்டரில் அலைமோதியது கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினர்.
ஒரு கட்டத்தில் தடியடி நடத்தி ரசிகர்களை போலீசார் அப்புறப்படுத்தினர். ரேவதி அவரது மகன் இருவரும் கூட்டத்தில் சிக்கி கீழே விழுந்த போது மக்கள் அவர்கள் மேல் ஏறி ஓடினர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது ரேவதி முன்னதாகவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஸ்ரீதேஜ் ஆபத்தான நிலையில், செகந்திராபாத்தில் உள்ள கிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
நடிகரின் பாதுகாப்புக் குழுவினர் மற்றும் சந்தியா திரையரங்கின் நிர்வாகத்தின் மீது, பாரதீய நியாய சந்ஹித்தின் பிரிவின் கீழ், போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்த அல்லு அர்ஜுன் இந்த இக்கட்டான சூழ்நிலையில் குடும்பத்தினருக்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம். இதனால் படத்தின் கொண்டாட்டங்களில் எங்களால் மகிழ்ச்சியாக கலந்து கொள்ள முடியவில்லை ரேவதியின் குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்து தனது சார்பில் ரேவதியின் குடும்பத்திற்கு 25 லட்ச ரூபாய் கொடுத்துள்ளார் அல்லு அர்ஜுன்.