in

20 ஆண்டுகளுக்குப் பிறகு திருவிளக்கு பூஜை வெகு விமர்சையாக நடைபெற்றது

20 ஆண்டுகளுக்குப் பிறகு திருவிளக்கு பூஜை வெகு விமர்சையாக நடைபெற்றது

 

சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி திருக்கோவிலில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு திருவிளக்கு பூஜை வெகு விமர்சையாக நடைபெற்றது திரளான பக்தர்கள் பங்கேற்பு

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயண சுவாமி திருக்கோவிலில் ஒவ்வொரு தமிழ் மாத கடைசி வெள்ளிக்கிழமை அன்று 108 திருவிளக்கு பூஜை நடைபெற்று வந்தது.

இந்நிலையில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு பல்வேறு காரணங்களால் திருவிளக்கு பூஜை நடைபெறுவது நிறுத்தப்பட்டது. இந்நிலையில் பக்தர்களளின் நீண்ட நாள் வேண்டுகோளுக்கு இணங்க இந்து ஆலய பாதுகாப்பு இயக்கம் சார்பில் திருவிளக்கு பூஜை நடத்துவதற்கான கோரிக்கை மனு கோவில் நிர்வாகத்திடம் வழங்கப்பட்டது.

இதனையடுத்து கோவில் நிர்வாகம் அனுமதி அளித்ததை தொடர்ந்து 20 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று இரவு எட்டு மணி அளவில் பெருங்குளம் செங்கோல் ஆதீனம்சிவப்பிரகாச தேசிக சத்திய ஞான பரமாசாரிய சுவாமிகள் திருவிளக்கு பூஜையை துவங்கி வைத்தார் சுவாமினி நித்யானந்த சரஸ்வதி திருவிளக்கு மந்திரங்களை சொல்ல பக்தர்கள் அதை பின் தொடர்ந்தனர்.

இதில் உள்ளூர் மட்டுமின்றி அருகில் உள்ள கிராமங்களில் இருந்தும் பெண்கள் மற்றும் குழந்தைகள் கலந்து கொண்டு ஆர்வத்துடன் திருவிளக்கு ஏற்றி வழிபட்டனர்.

மேலும் இனிவரும் காலங்களில் ஒவ்வொரு தமிழ் மாதமும் 3 ம் வெள்ளிக்கிழமை அன்று திருவிளக்கு பூஜை நடைபெறும் என இந்து ஆலய பாதுகாப்பு இயக்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

What do you think?

உயர்கல்வி மாணவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப தமிழில் ஆய்வுகள் நடத்த உரிய நடவடிக்கை

மேலப்பாளையத்தில் மெகா தூய்மை பணியை துவக்கி வைத்த எம் எல் ஏ