in

“பூம்புகார் விற்பனை நிலையம்”

“பூம்புகார் விற்பனை நிலையம்”

தமிழ்நாடு கைத்தறி தொழில் வளர்ச்சிக் கழகத்தின் தமிழ்நாடு அரசு‌ சார்ந்த நிறுவனமான “பூம்புகார்” இந்தியா முழுவதும் 17 விற்பனை நிலையங்களைக் கொண்டுள்ளது. இந்நிறுவனம் கைவினைக் கலைஞர்களின் கலைநயம் மிக்க பொருட்களை நேரடியாக கொள்முதல் செய்தும், சொந்த கைவினை கலைஞர்கள் மூலம் தயாராகும் பல்வேறு பொருட்களை விற்பனையும் செய்து வருகிறது.

இங்கு வெண்கலம், பித்தளை, செம்பு ஆகியவற்றை கொண்டு செய்யப்பட்ட பல்வேறு வடிவங்களினாலான பஞ்சலோகசிலைகள், தஞ்சாவூர் மாவட்டத்தில் புவிசார் குறியீடு பெற்ற பொருட்கள்,வெள்ளை உலோகத்தினாலான பொருட்கள், கருப்பு உலோகத்தினாலான பொருட்கள், மர சிற்பங்கள், கற்சிற்பங்கள், மர வேலைப்படுகள், கல் வேலைப்படுகள், தோல், சணல் மற்றும் களிமண்ணால் ஆன பொருட்கள், சுவாமிமலை பஞ்சலோகசிலைகள், கொண்டப்பள்ளி பொம்மைகள், மீனாகரி, கலம்கரி, சந்தனமாலைகள், போன்றவை உள்ளன. சென்னை, எழும்பூர் அருங்காட்சியகம், கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, சுவாமிமலை , புது டெல்லி மற்றும் கொல்கத்தா ஆகியவற்றில் அமைந்துள்ள 17 விற்பனை நிலையங்கள் மூலம் கைவினைஞர்களின் பொருட்களை சந்தைப்படுத்தி விற்பனை செய்து வருகிறது.

அகல் விளக்குகள் கண்காட்சி மற்றும் விற்பனை..

தற்போது கார்த்திகை தீப விழா வரும் டிசம்பர் 13ம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் 18ஆம் தேதி வரை பூம்புகார் விற்பனை நிலையத்தில் மண் மற்றும் பித்தளையிலான வித விதமான அகல் விளக்குகள் கண்காட்சி மற்றும் விற்பனை வரும் 18 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. ரூ.10 பத்து முதல் 10 ஆயிரம் வரையிலான விளக்குகளுக்கு 10% தள்ளுபடி அளிக்கப்படுகிறது.

What do you think?

விஜய் அம்பேத்கர் தொடர்பான நூலை வெளியிட்டு இருப்பதும் அவர் குறித்து பேசி இருப்பதும் பெருமை அளிக்கிறது

நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் மனித கழிவு மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம்