in

அய்யம்பேட்டையில் பயங்கரம். மினிபஸ் பேருந்து டிரைவர் வெட்டிக்கொலை

அய்யம்பேட்டையில் பயங்கரம். மினிபஸ் பேருந்து டிரைவர் வெட்டிக்கொலை. கொலையாளிகளை பிடிக்க வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்..

தஞ்சை கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு..

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா பசுபதிகோயில் திரௌபதி அம்மன் கோயில் தெருவில் வசித்து வருபவர் சங்கர் மகன் சிவா(26). இவர் அய்யம்பேட்டையில் இருந்து கண்டியூர் நோக்கி செல்லும் மினி பஸ்ஸில் பேருந்து டிரைவராக வேலை பார்த்து வந்தார். இன்று மாலை அய்யம்பேட்டை சாலை தெருவில் மினி பேருந்தை நிறுத்திவிட்டு, டிரைவர் சிவாவும், நடத்துனர் மாத்தூர் ரவியும் அருகில் உள்ள டீக்கடையில் டீ குடித்துவிட்டு அங்கிருந்து திரும்பி வந்து கொண்டிருந்தனர்.

அப்போது ஒரு மோட்டார் சைக்கிளில் முகமூடி அணிந்த மூன்று வாலிபர்கள் அய்யம்பேட்டை மெயின் ரோட்டில் ஓட்டுநர் சிவாவை அரிவாளால் தலை, கை, கால் என பல்வேறு இடங்களில் சரமாரியாக வெட்டினர். இதில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடிக்க சிவா உயிரிழந்தார். தொடர்ந்து பொதுமக்கள் கொலையாளியை பிடிக்க வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் தஞ்சாவூர் கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பாபநாசம் காவல்துறை கண்காணிப்பாளர் முருகவேல் மற்றும் போலீசார் பிரேதத்தை கைப்பற்றி, உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அய்யம்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து கொலையாளிகளை வலை வீசி வருகின்றனர்.

What do you think?

16 ஆம் தேதி தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் ரெயில் மறியல் போராட்டம் – ஐக்கிய விவசாயிகள் சங்கம்

“மத்திய மாவட்ட திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி” மாற்று திறனாளி மாணவர்களுக்கான விளையாட்டு போட்டிகள் மற்றும் நலதிட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சி