உலக நன்மைக்காக 1008 சங்காபிஷேக பூஜை- திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
விருதுநகர் ஸ்ரீசொக்கநாத சுவாமி கோயிலில் இன்று கார்த்திகை நான்காவது சோமவாரத்தை திங்கட்கிழமையை முன்னிட்டு, உலக நன்மைக்காக 1008 சங்காபிஷேக பூஜை- திரளான பக்தர்கள் சாமி தரிசனம்.
விருதுநகர் மேலரத வீதியில் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீசொக்கநாதர் உடனுறை ஸ்ரீமீனாட்சியம்மன் திரு கோயில் உள்ளது.
இங்கு கார்த்திகை சோமவாரத் நான்காவது திங்கட்கிழமையை முன்னிட்டு, உலக நன்மைக்காக 1008 சங்காபிஷேக பூஜை- திரளான பக்தர்கள் சாமி தரிசனம்.
மேலும் கார்த்திகை மாத சோமவாரங்களில் சிவன் கோயில்களில் நடைபெறும். சங்காபிஷேகங்களில் பங்கேற்று சாமி தரிசனம் செய்தால், நோயற்ற வாழ்வும், திருமணத்தடைகள் நீங்கவும், குழந்தை பேறு இல்லாதவர்களுக்கு குழந்தை பேறும், உலக நன்மையும் கிடைக்கும் என்பதும் பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
அதன்படி, இன்று விருதுநகர் ஸ்ரீசொக்கநாதர் கோயிலில் கார்த்திகை நான்காவது சோமவாரத்தை திங்கட்கிழமையை முன்னிட்டு, உலக நன்மைக்காக 1008 சங்காபிஷேக பூஜைகள் நடைபெற்றது.
இதற்கு முன்பாக விநாயகர் பூஜை கும்ப பூஜை நடைபெற்றது. பின்னர் கோயில் வளாகத்தில் சூலாயுதம் வடிவில் 1008 சங்குகளில் புனித நீர் நிரப்பப்பட்டு, அதற்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.
இதையடுத்து மூலவருக்கு புனித நீர் கொண்டு அபிஷேகங்கள் நடந்தது. பின்னர் சிறப்பு அலங்காரத்துடன் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
இந்த 1008 சங்காபிஷேக பூஜைகளில் விருதுநகர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பெண்கள், பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.