புது Business தொடங்கிய ஆலியா மானசா
ஆலியா மானசா சஞ்சீவ் இருவரும் ராஜா ராணி சீரியலில் நடிக்கும் போது காதலித்து வீட்டை விட்டு வெளியேறி சஞ்சீவ் ..வை திருமணம் செய்து கொண்டவர்கலுக்கு இரண்டு குழந்தைகள் இருக்க அண்மையில் பிரம்மாண்டமாக வீடு கட்டி கிரக பிரவேசம் செய்தனர்.
சின்னத்திரையில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஆல்யா மானசாவும் ஒருவர். ஒரு நாளைக்கு 50 ஆயிரம் வாங்குகிறார். . சின்னத்திரையில் சம்பாதித்து வரும் சஞ்சீவ் – ஆல்யா மானசா ஜோடி, சமீபத்தில் சென்னையில் பல கோடி செலவில் சொந்தமாக வீடு கட்டி குடியேறினர்.
சினிமா மற்றும் சின்னத்திரை நட்சத்திரங்கள் சம்பாதிக்கும் பணத்தை, முதலீடு செய்வது வழக்கம். சிலர் வியாபாரத்தில் போடுவார். அந்த வகையில் நடிகை ஆல்யா மானசாவும் புதிதாக தொழில் தொடங்கி தற்போது நல்ல வருமானம் ஈட்டி வருகிறார்.
கேரளாவின் ஆலப்புழாவில் படகு இல்லங்கள் மிகவும் பிரபலம். ஆலப்புழாவில் உள்ள படகு இல்லங்களில் விடுமுறையைக் கழிக்க இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் இருந்து ஏராளமானோர் குவிந்து வருகின்றனர்.
அருமையான டியூரிஸ்ட் ஸ்பாட். இது படகு இல்லத்தில் ஒரு நாள் தங்குவதற்கு ஆயிரக்கணக்கில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அந்த வகையில் ஆல்யா மானசாவும் சொந்தமாக படகு இல்லம் வாங்கியுள்ளார். படகு இல்லத்தின் விலை ரூ. 2 கோடி. நவீன வசதிகளுடன் கூடிய படுக்கையறைகள், பிரமாண்டமான டைனிங் ஹால், டிஜே என அனைத்து வசதிகளையும் கொண்டுள்ளது. புதிய பிசினஸை ஆரம்பித்த இவர்களுக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.