வீடியோ காலில் கதறி அழுத.. Nethran இறப்பு பற்றி ..பகிர்ந்த ரூபஸ்ரீ…
கடந்த வெள்ளிக்கிழமை புற்று நோயால் மறைந்த நடிகர் Nethran பற்றி கண்கலங்கி பதிவிட்டுள்ளார் Rupasree.
மருதாணி சீரியலில் அறிமுகமான Nethran தன்னுடன் நடித்த தீபாவை காதலித்து திருமணம் செய்து கொண்டவர்களுக்கு Anchana, Abeneya என்ற இரு மகள்கள் உண்டு. திருமணத்திற்கு பிறகு நடிக்காத தீபா மகள்கள் வளர்ந்த பிறகு மீண்டும் சீரியலில் என்ட்ரி கொடுத்தார். தற்பொழுது சிங்க பெண்ணே, முத்தழகு என்ற சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
Rupasree தனது பதிவில்….நேத்திரனுடைய மறைவை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை எல்லோரிடமும் அன்பாக பேசும் அற்புதமான மனிதர், அருமையாக டான்ஸ் ஆடுவார் செட்டில் இருக்கும் போது அவரை டான்ஸ் ஆட சொல்லி பார்ப்போம். ஷூட்டிங் ஸ்பாட்டில் ஒருமுறை திடீரென்று நெஞ்சுவலி என்று நெஞ்சை பிடித்து சாய்ந்து விட்டார்.
அவருக்கு சுடுதண்ணி வைத்துக் கொடுத்து ஹாஸ்பிடலுக்கு போக சொன்னோம், ஆனால் அவர் இது வெறும் கேஸ் பிராப்ளம் என்று சொல்லிட்டார். அவருக்கு கேன்சர் என்று தெரிந்த போது அவரிடம் ஒருநாள் வீடியோ காலில் பேசினேன். ஆளே அடையாளம் தெரியாமல் மாறிவிட்டார்.
அவரை பார்க்கும் பொழுது எனக்கு கஷ்டமாக இருந்தது. திடீரென்று இவருடைய மறைவை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை சாகுற வயசே இல்லை, கொடுமையான சூழ்நிலையில் இரண்டு பெண் பிள்ளைகளுடன் இருக்கும் தீபாவை பார்க்கும் போது எங்களுக்கு கஷ்டமாக இருக்கிறது.
தயவு செய்து எல்லோரும் உடம்பை பார்த்துக் கொள்ளுங்கள் என்று ஸ்ரீ ரூபா கூறியுள்ளார் .இவரைப் பற்றி சீரியல் நடிகர் ஸ்ரீகுமார் கொடுத்த பேட்டியில் ஆரம்பத்தில் Nethran ரொம்பவும் கஷ்டப்பட்டான் வாய்ப்புகள் கிடைத்து நல்ல நிலைக்கு வரும் பொழுது திடீரென்று கேன்சர் என்ற செய்தியால் அவன் குடும்பமே நிலைகுலைந்து போய்விட்டது.
நேத்து அரசு மருத்துவமனையில் தான் கேன்சர்…க்கான ட்ரீட்மென்ட் எடுத்து வந்தார். அவர் நிலைமையை பார்த்த பொழுது அழுகையை கட்டுப்படுத்த முடியாமல் வெளியே வந்தேன். தீபாவை பார்த்ததும் நான் உடைந்து போய்விட்டேன் அழுது விட்டேன் என்று கூறியுள்ளார்.