in

கோவில் நகை திருடிய திருடர்களை 13 கிலோ மீட்டர் தூரம்  துரத்தி பிடித்த போலீசார் 

கோவில் நகை திருடிய திருடர்களை 13 கிலோ மீட்டர் தூரம்  துரத்தி பிடித்த போலீசார் 

 

திருவாடனை அருகே கோவிலில் நகை திருடிய திருடர்களை 13 கிலோ மீட்டர் தூரம்  துரத்தி பிடித்த போலீசார் 

திருவாடானை பேருந்து நிலையத்தில் வைத்து பிடித்ததால் மக்கள் கூட்டம்  கூடினர் பரபரப்பு நிலவியது.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா வட்டாணம் அருகே உள்ள ஓடவயல் கிராமத்தில் அருள்மிகு மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு சமீபத்தில் கும்பாபிஷேகம் நடந்ததாக சொல்லப்படுகிறது.  இந்த கோவிலில் நேர்த்திகடன்  செலுத்துவதற்காக பொட்டு, தாலி, ஆபரணம் உள்ளிட்ட தங்க நகைகளை  காணிக்கையாக செலுத்தி உள்ளார்கள். அது சுமார் ஏழு முதல் 10 பவுன் வரை இருந்ததாக சொல்லப்படுகிறது.

இன்று இரண்டு மர்ம நபர்கள் ஹெல்மெட் அணிந்து பகலிலேயே கோவிலுக்குள் நுழைந்து நகைகளை திருடி திரும்பும் பொழுது ஊர் மக்கள் துரத்தி உள்ளனர். இருவரும் இரண்டு சக்கர வாகனத்தில் தப்பி ஓடிய நிலையில் உடனடியாக தொண்டி காவல் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டு பொதுமக்களும் போலீசார் தொடர்ந்து துரத்தி வந்த நிலையில் திருவாடானை பேருந்து நிலையத்தில் வைத்து பிடித்தனர்.

அப்போது ஒருவன் மட்டும் தப்பி ஓடி தலை மறைவானன். ஒருவனை பிடித்த போலீசார் விசாரித்து வருகின்றனர்.

What do you think?

நாகை மாவட்ட விசைப்படகு மற்றும் நாட்டுப் படகு மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடை

காற்று சுழற்சி காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று அதிகாலை முதல் பரவலாக மழை