in

மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் 142 ஆவது பிறந்த நாளையொட்டி பாரதியின் திருவுருவச் சிலைக்கு மலர் தூவி மரியாதை

மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் 142 ஆவது பிறந்த நாளையொட்டி பாரதியின் திருவுருவச் சிலைக்கு மலர் தூவி மரியாதை

 

மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் 142 ஆவது பிறந்த நாளை ஒட்டி நெல்லையில் அவர் படித்த பள்ளி வகுப்பறையில் மாணவ மாணவிகள் பாரதியின் திருவுருவச் சிலைக்கு மலர் தூவி மரியாதை செய்து உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

இந்தியா சுதந்திரத்திற்காக தனது கவி மூலம் தேசபக்தியை உருவாக்கிய மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 142 வது பிறந்த தின விழா இன்றைய தினம் கொண்டாடப்படுகிறது.

நெல்லை சந்திப்பு பகுதியில் அமைந்துள்ள ம தி தா இந்து கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் மகாகவி சுப்ரமணிய பாரதியார் தனது பள்ளி படிப்பை படித்தார் அவர் படித்த வகுப்பறை இன்றளவும் நாற்றங்கால் என்ற பெயருடன் பராமரிக்கப்பட்டு வருகிறது.

பெண்ணுரிமைக்காக குரல் கொடுத்த பாரதியின் வரிகள் பெண்கள் மத்தியில் தொடர்ந்து இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் பாரதி படித்த வகுப்பறை மாணவிகள் மட்டும் படிக்கும் வகுப்பறையாக பள்ளி நிர்வாகத்தின் மூலம் பராமரிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் மகாகவி பாரதியாரின் 142 ஆவது பிறந்த நாளை ஒட்டி பாரதி படித்த வகுப்பறையில் அமைந்திருக்கும் மார்பளவு சிலைக்கு பள்ளி ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் மலர் தூவி மரியாதை செய்தனர்.

தொடர்ந்து மாணவிகள் பாரதியின் பாடல் பாடி கவிய அஞ்சலி செலுத்தியதுடன் தேசிய ஒருமைப்பாட்டு உறுதி மொழியையும் எடுத்துக்கொண்டனர்.

What do you think?

திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபத் திருவிழா

மட்டமான வேலை செஞ்ச தர்ஷிகா