ஹாலிவுட் நடிகை சிட்னி ஸ்வீனி ..யுடன் நடிக்கும் தனுஷ்
விமர்சனங்களை தட்டி தூக்கிட்டு எதைபற்றியும் கவலைப்படாமல் கர்மமே கண்ணாயிருப்பவர் தனுஷ். ஒரு பக்கம் படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் இன்னொரு பக்கம் இயக்கத்திலும் தயாரிப்பிலும் கலக்கிட்டிருகார் தனுஷ் . . நடிகர் தனுஷ் சென்ற வாரம் லண்டனில் சர்க்கரை நோய் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது தன்னை சூழ்ந்து கொண்ட ரசிகர்களை பார்த்து மகிழ்ச்சியடைந்தார்.
தனுஷ், 2018 இல் தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் தி ஃபகிர்(The Extraordinary Journey of the Fakir.) என்ற திரைப்படத்தில் ஹாலிவுட்டில் அறிமுகமானார். 2022 இல் வெளியான கிரே மேனில் தனுஷ் கேமியோ ரோலில் நடித்தார். உலகம் முழுதும் ரசிகர்கலை கொண்டிருக்கும் தனுஷ் தற்பொழுது, மீண்டும் ஹாலிவுட்டில் ஸ்ட்ரீட் ஃபைட்டர் என்ற படத்தில் தனுஷ் லீடு ரோலில் நடிக்கப் போகிறார். இவருக்கு ஜோடியாக ஹாலிவுட் நடிகை சிட்னி ஸ்வீனி நடிக்க போவதாக செய்திகள் அனல் பறக்கிறது