in

கார்த்திகை மாத ஏகாதசி திருநாளை முன்னிட்டு கருட வாகன சேவை

கார்த்திகை மாத ஏகாதசி திருநாளை முன்னிட்டு கருட வாகன சேவை

 

நாட்டரசன்கோட்டை அருள்மிகு ஶ்ரீ பிரசன்ன வெங்கடாஜலபதி பெருமாள் திருக்கோவிலில் கார்த்திகை மாத ஏகாதசி திருநாளை முன்னிட்டு கருட வாகன சேவை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் அர்ச்சனைகள் செய்து வழிபாடு.

சிவகங்கை மாவட்டம் நாட்டரசன்கோட்டை நகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ பிரசன்ன வெங்கடாஜலபதி பெருமாள் திருக்கோவிலில் கார்த்திகை மாத ஏகாதசி திருநாளை முன்னிட்டு கருட வாகன சேவை நடைபெற்றது.

முன்னதாக உற்சவர் பெருமாள் சர்வ அலங்காரத்தில் பெரிய திருவடியான கருட வாகனத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்று கற்பூர ஆராதனை காண்பிக்கப்பட்டன.

பின்னர் மங்கள வாத்தியங்களுடன் பக்தர்கள் கருட வாகனத்தில் நகர் வலம் வர செய்தனர். கருட வாகனத்தில் உலா வந்த வெங்கடாஜலபதி பெருமாளை ஏராளமான பக்தர்கள் அர்ச்சனைகள் செய்து வழிபாடு செய்தனர்.

What do you think?

திருப்பதி கோவிலிருந்து ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் மற்றும் தாயாருக்கு வஸ்திர மரியாதை இன்று வழங்கப்பட்டது

அரசு ஓட்டலை விலை பேசிய விக்னேஷ் சிவன்…. அதிர்ந்த புதுவை அமைச்சர்