in

அரசு ஓட்டலை விலை பேசிய விக்னேஷ் சிவன்…. அதிர்ந்த புதுவை அமைச்சர்

அரசு ஓட்டலை விலை பேசிய விக்னேஷ் சிவன்…. அதிர்ந்த புதுவை அமைச்சர்

 

நயன்தாராவின் கணவர் விக்னேஷ் சிவன், அரசு ஓட்டலை விலை கேட்டதால் அமைச்சர் கடும் அதிர்ச்சிக்கு உள்ளானார்.

லேடிஸ் சூப்பர் ஸ்டாரின் கணவரும் இயக்குனருமான விக்னேஷ் சிவன் நேற்று இரவு புதுவை வந்தவர் சட்டசபைக்கு சென்று சுற்றுலா துறை அமைச்சர் லக்ஷ்மி நாராயணனை சந்தித்து கடற்கரை சாலையில் உள்ள அரசுக்கு சொந்தமான சீகல்ஸ் ஹோட்டலை விலைக்கு கேட்டதால் கடும் அதிர்ச்சியடைந்த அமைச்சர் அது அரசுக்கு சொந்தமானது என்றார்.

குத்தகைக்கு கேட்டும் மறுத்த அமைச்சர் சீகல்ஸ்…சை ஒப்பந்த அடிப்படையில் வாடகைக்கு கொடுக்குமாறு கேட்டார். சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் சிகல்ஸ் ஓட்டல் நடக்கிறது ஏராளமான ஊழியர்கள் பணி செய்து வருவதால் ஒப்பந்தம் அடிப்படையிலும் வழங்க முடியாது …இன்னு மறுத்தற்கு விடாபிடியாக viki புதுவையில் உள்ள கடற்கரை பகுதிகள் தனியார் வசம் உள்ளது அதிலேயே ஏதாவது ஒன்று கிடைக்குமா என்று அமைச்சரை நச்சரித்தார்.

கடந்த 2017 ஆம் ஆண்டு டெண்டர் விடப்பட்டு தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்னால் எதுவும் செய்ய முடியாது …இன்னு மறுக்க. புதுவைக்கு வரும் பயணிகளை கவரும் வகையில் நிகழ்ச்சிகள் ஏதாவது கிடைக்குமா என்று கேட்டார். புதுச்சேரி துறைமுக வளாகத்தில் பொழுதுபோக்கு மையம் ஒன்றை கட்டி வைத்துள்ளோம். ஒரே நேரத்தில் 4000 பார்வைகள் நிகழ்ச்சியை பார்க்க முடியும்.

அரசு நிர்னைத்துள்ள கட்டணங்கள்…GST சேர்த்து பணம் செலுத்தினால் நீங்கள் எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் நிகழ்ச்சியை நடத்தலாம் ..இன்னு கூற சம்மதம் தெரிவித்து துறைமுக வளாகத்தை பார்வையிட்டார் விக்னேஷ் சிவன்.

இந்த செய்தியைப்பார்த்த நெட்டிசன்கள் எல்லாத்துக்கும் காரணம் பணத்திமிர் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.

What do you think?

கார்த்திகை மாத ஏகாதசி திருநாளை முன்னிட்டு கருட வாகன சேவை

தேவரகொண்டா , ராஷ்மிகா… ரகசியமாக ???