in

விவகாரத்தை அறிவித்த மற்றோரு சினிமா பிரபலம்

விவகாரத்தை அறிவித்த மற்றோரு சினிமா பிரபலம்

தனுஷ், ஜெயம்ரவி,  G.V. Pragash, AR. Ragman…னை தொடர்ந்து தமிழ்திரைப்பட தயாரிப்பாளர் சீனு ராமசாமி தனது மனைவி தர்ஷனாவுடனான தனது 17 ஆண்டு திருமணத்தை முடித்துக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.

தென்மேற்கு பருவக்காற்று மற்றும் தர்ம துரை போன்ற படங்களை இயக்கிய சீனு ராமசாமி சமூக ஊடகத்தில் தனது விவாகரத்தை அறிவித்தார்.

அவரது அறிக்கையில், இருவரும் விவாகரத்து பெற்று அவர் அவருக்கு உண்டான திசையில் பயணிக்க நினைக்கிறோம், அந்த பாதையில் தர்ஷனாவின் செயல்பாடுகள் என்னையும் எனது செயல்பாடுகள் அவரையும் எவ்விதத்திலும் சேராது, பொறுப்பாகாது என்பதை நான் அறிவேன் அவரும் அறிவார்.

இப்பிரிவுக்கு உதவும் படி சென்னை உயர்நீதி மன்றத்தை நாடியுள்ளோம், பரஸ்பரம் மற்றும் சிந்தனைமிக்க விவாதங்களுக்குப் பிறகு எடுக்கப்பட்ட முடிவு இது.

இந்த சவாலான காலகட்டத்தில் இருவரின் தனிப்பட்ட இந்த முடிவுக்கும் அதன் உரிமைக்கு மதிப்பளிக்கும் …படி வேண்டுகோள் வைத்தார். இந்த அறிவிப்பு ரசிகர்களையும் சக ஊழியர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

குறிப்பாக ராமசாமி தனது படங்களில் குடும்ப உறவுகளை உணர்ச்சிகரமாக சித்தரிப்பதில் வல்லவர், ஆனால் தனிப்பட்ட பிரச்சினைகளின் சிக்கல்களை எதிர்கொள்ள தெரியவில்லை.

இவரின் இந்த பதிவை பார்த்த வலைவாசி ஒருவர் இப்படி பகிர்ந்து உள்ளார். ஐயா சினிமா துறையை சார்ந்தவர்களே.. நீங்கள் விருப்ப படி இணைந்து வாழுங்கள் அல்லது பிரிந்து வாழுங்கள். இதை ஏன் பொதுவெளியில் அறிவிக்க வேண்டும். உங்களை பார்க்கும் பொது சமூகம் உங்களை முன் மாதிரியாக எடுத்து கொள்வார்கள்.. உங்கள் தனிப்பட்ட வாழ்க்கை தனிப்பட்ட வாழ்க்கையாக இருப்பது நல்லது.

What do you think?

ரஜினிகாந்த்தின் பிறந்தநாளுக்கு பிரபலங்களின் வாழ்த்து

தனுஷ்…யின் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்…. ரிலீஸ் தேதி அறிவிப்பு