கோவாவில் ஆண்டனி தட்டில்..லை திருமணம் செய்த நடிகை கீர்த்தி சுரேஷ், தளபதி விஜய் நேரில் சென்று வாழ்த்தினார்
கீர்த்தி சுரேஷ்…ஷை இணைத்து பல நபர்களுடன் கிசு கிசு எழுந்த நிலையில் அனைத்திற்கும் மௌனம் சாதித்த கீர்த்தி ஒரு வழியாக தனது நீண்ட நாள் காதலரான ஆண்டனி தட்டிலை நேற்று திருமணம் செய்தார்.
ரஜினியின் நெற்றிக்கண் படத்தில் நடித்த மேனகா திரைப்பட தயாரிப்பாளர் ஜி. சுரேஷ் குமார்…ரை காதலித்து திருமணம் செய்தார். இவரின் மகள் கீர்த்தி சுரேஷ் மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர், இது என்ன மாயம் என்ற படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானார்.
தற்பொழுது பாலிவுட்டிலும் ஜான் பேபி என்ற படத்தில் நடித்திருக்கிறார். பிஸி..யான ஆர்டிஸ்ட்…டாக இருந்த Keerthi திடிரென்று தனது காதலரை அறிமுகம் செய்து திருமண தேதியை அறிவித்து ரஸிகர்கலூக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.
இவரது கணவர் ஆண்டனி தட்டில் ஒரு தொழிலதிபர் கொச்சி, சென்னை, துபாய், போன்ற இடங்களில் தொழில் செய்து வருகிறார்.
இவர்களுக்கு நேற்று கோவாவில் திருமணம் நடைபெற்றது. ஆண்டனி தட்டில் கிறிஸ்துவராக இருந்தாலும் இந்த முறைப்படி கீர்த்திக்கு தாலி கட்டினார். இது குறித்து பிரபல பத்திரிக்கையாளர் சேகுவேரா கூறியதாவது இவர்தான் என்னுடைய காதலர் என்று ஏற்கனவே கூறி இருந்தால் பல பேருடன் இவரை இணைத்து கிசுகிசு எழுந்திருக்காது.
இவர்களின் திருமணத்திற்கு விஜய், த்ரிஷா, மாளவிகா மோகன் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டிருக்க விருந்தினர்களுக்கு கேரள முறைப்படி விருதுகள் பரிமாறப்பட்டது. சென்னையில் இருந்து விஜய் மற்றும் திரிஷா விமானத்தின் மூலம் கோவாவுக்கு சென்றனர்.