in

அச்சிறுபாக்கம் ஆட்சீஸ்வர்ர் திருக்கோயிலில் கார்த்திகை தீப பெருவிழா

அச்சிறுபாக்கம் ஆட்சீஸ்வர்ர் திருக்கோயிலில் கார்த்திகை தீப பெருவிழா

 

அச்சிறுபாக்கம் ஆட்சீஸ்வர்ர் திருக்கோயிலில் கார்த்திகை தீப பெருவிழாவை ஒட்டி பஞ்சமூர்த்தி புறப்பாடு நடைபெற்றது.

கார்த்திகை தீபத்தன்று விநாயகப் பெருமான் ஆட்சீஸ்வரர், இளங்கிளி அம்மன், முருகப்பெருமான் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகளுக்கும் சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனைகள் நடைபெற்றன.

மாலை 6 மணிக்கு மூலவர் சன்னதியில் இருந்து பஞ்ச தீபங்கள் கொண்டுவரப்பட்டு கோயிலின் கோபுரங்களில் தீபம் ஏற்றப்பட்டது.

அதன் பின்னர், விநாயகப் பெருமான், ஆட்சீஸ்வரர், இளங்கிளி அம்மன், வள்ளி தெய்வானையுடன் கூடிய முருகப்பெருமான், சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட பஞ்சமூர்த்தி களுக்கும் சிறப்பு வழிபாடும் திருவீதி உலா வருதலும் நடைபெற்றன.

அதன் பின்னர், கோயிலின் எதிரே சொக்கப்பனை கொளுத்தப்பட்டது.

விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியும் அம்மனையும் தரிசித்து சென்றனர். விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது.

What do you think?

சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் திருக்கார்த்திகை சிறப்பு வழிபாடு

அருள்மிகு நெல்லையப்பா் காந்திமதி அம்பாள் திருக்கோவிலில் காா்த்திகை தீபத் திருவிழா