in

பழனி முருகன் கோவிலில் மகாதீபம் ஏற்றப்பட்டது

பழனி முருகன் கோவிலில் மகாதீபம் ஏற்றப்பட்டது

 

கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு பழனி முருகன் கோவிலில் மகாதீபம் ஏற்றப்பட்டது. அதனை தொடர்ந்து சொக்கப்பனை கொளுத்தப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயிலில் விமர்சையாக கொண்டாடப்படும் விழாக்களில் ஒன்றான காத்திகை தீபத்திருவிழா  நடைபெற்றது. கடந்த 7ம்தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கிய திருக்கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான மகாதீபம் மற்றும் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்வு நடைபெற்றது.

அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு மலை மீதுள்ள தீபஸ்தம்பத்தில் மகாதீபம் ஏற்றப்பட்டது. தொடர்ந்து பனை ஓலைகளை கொண்டு செய்யப்பட்டிருந்த சொக்கப் பனையும் தீயிட்டு எரிக்கப்பட்டது.

 

கார்த்திகை தீப திருவிழாவில் பரணி தீபம் மற்றும் சொக்கப்பனை கொளுத்தப்பட்டதை நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அரோகரா கோஷம் முழங்க வழிபட்டனர். இதனை தொடர்ந்து பழனி பகுதியில் உள்ள வீடுகள் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் அனைத்திலும் தீபம் ஏற்றி வழிபாடு நடைபெற்றது.

கலந்துகொண்டு கண்ட விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் இணைஆணையர் மாரிமுத்து தலைமையிலான கோயில் அதிகாரிகள் செய்திருந்தனர். 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

What do you think?

திருப்பதி மலையில் சிறப்பு விசாரணை குழுவினர் ஆய்வு ஆவணங்கள் பறிமுதல்

தமிழகத்தில் புதிய கலோரி ஃப்ரீ சர்க்கரை “ஸ்டீவியா” அறிமுகம்