தமிழகத்தில் புதிய கலோரி ஃப்ரீ சர்க்கரை “ஸ்டீவியா” அறிமுகம்
தமிழகத்தில் “ஸ்டீவியா” என்ற புதிய கலோரி ஃப்ரீ சர்க்கரை அறிமுகப் படுத்தப்பட உள்ளது. இது பற்றி மதுரையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில், இண்டர்நேஷனல் ஸ்டீவியா அக்ரிகல்ச்சரல் ரிசர்ச் டிரஸ்ட் நிர்வாகி முத்துகிருஷ்ணன்.ஜெ கூறியதாவது, தமிழகத்தில் புதிய இனிப்பு புரட்சியாக ஸ்டீவியா என்ற கலோரி ஃப்ரீ சர்க்கரையை அறிமுகப்படுத்துகிறோம்.
இது தற்போது அமெரிக்கா, ஜெர்மனி இங்கிலாந்து போன்ற வெளி நாடுகளில் அதிகமாக பயன்படுத்தப் படுகிறது. இந்த புதிய கலோரி ஃப்ரீ சர்க்கரை ஸ்டீவியா என்ற செடியின் இலையில் இருந்து தயார் செய்யப்படுகிறது.
இந்தச் செடியின் விதைகள் வெளி நாட்டில் இருந்து தருவிக்கப்பட்டு, தமிழகத்தில் பயிர் செய்து இந்த புதிய கலோரி ஃப்ரீ சர்க்கரை உருவாக்க உள்ளோம். இது பற்றிய ஸ்டீவியா உச்சி மாநாடு-2025 கண்காட்சி மற்றும் மாநாடு வருகிற ஜனவரி 24 மற்றும் 25 தேதிகளில் சென்னை அண்ணா யுனிவர்சிட்டி விவேகானந்தா ஆடிட்டோரியத்தில் நடைபெற உள்ளது.
இதில் இந்தியா முழுவதிலும் இருந்து ஏராளமான தொழில் முனைவோர்கள் கலந்து கொள்ள உள்ளனர். மத்திய அரசின் மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம் இதை ஊக்கப்படுத்தி செயல்படுத்த உள்ளனர். இதன் மூலம் ஒரு புதிய இனிப்பு புரட்சியை ஏற்படுத்த முடியும் என்று கூறினார்.