கழிவுநீர் கால்வாயுடன் மழை சேர்ந்து வீடுகளுக்குள் புகுவதால் பொதுமக்கள் அவதி
திருவெறும்பூர் அருகே உள்ள வாழவந்தான் கோட்டை பெரியார் நகர் பகுதியில்சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளது.
இந்நிலையில் தற்போது மூன்று நாட்களாக பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக அந்த வழியாக செல்லும் கால்வாய்கள் நிரம்பி வழிவதால் கழிவுநீருடன் மழை நீர் சேர்ந்து ஆறு போல் ஊருக்குள் புகுந்து வீடுகளுக்குள் புகுந்துள்ளதால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர்.
இந்நிலையில் இச்சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வருவாய்த்துறை மற்றும் ஊராட்சி நிர்வாகம் உடனடியாக தண்ணீர் வடிவதற்கு ஜே சி பி இயந்திரத்தின் மூலம் தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகளில் இருந்து தண்ணீர் வடிவதற்கு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
இருந்தும் பொதுமக்கள் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பெரும் அவதித்து உள்ளாகி வருகின்றனர்.