பாபநாசம் அருகே இளங்கார்குடி அம்மன் கோயில் தெரு கிராமத்தில் வீடுகளை சூழ்ந்த மழைநீரை நீர் மோட்டார் மூலம் வெளியேற்ற கிராம மக்கள் கோரிக்கை….தங்களுக்கு உணவு, இருப்பிடம் இல்லாமல் வாழ்வாதாரத்தை மீட்டு தர கோரி கோரிக்கை…
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா உம்பளாம்பாடி ஊராட்சி இளங்காரக்குடியில் அம்மன்கோவில் தெரு பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக பெய்த கன மழையில் 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது. பிரதான வாய்க்கால் ,குளம் ஆகியவை மழை நீரின் மூழ்கி வடிவேல் வாய்க்கால் இல்லாமல் கிராமத்தில் உள்ள வீடுகளை மழைநீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்…
மேலும் பல முறை ஊராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் மழைநீரும் குடிநீரும் கலந்து உள்ள நீரை தான் சமைப்பதற்கு குடிப்பதற்கும் பயன்படுத்துகிறோம் என வேதனையுடன் தெரிவித்துள்ளனர்…
மேலும் வடிகால்வாய்க்காலை தூர்வாரி கிராமத்தின் வீடுகளில் சூழ்ந்துள்ள மழை நீரை நீர் மோட்டார் மூலம் வெளியேற்ற வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்காவிடில் அடுத்த கட்ட போராட்டத்தில் ஈடுபடுவதாக தெரிவித்துள்ளனர்…