in

தஞ்சாவூர் பெரிய கோவிலில் தென் கைலாய பௌர்ணமி கிரிவலம் நடைபெற்றது.

தஞ்சாவூர் பெரிய கோவிலில் தென் கைலாய பௌர்ணமி கிரிவலம் நடைபெற்றது. இதில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்ட பெருவுடையாரின் அருளைப் பெற்றனர்.

தஞ்சை பெரிய கோவிலில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு பௌர்ணமி கிரிவலம் கடந்த செப்டம்பர் மாதம் முதல் துவங்கியது. இந்த நிலையில் கார்த்திகை மாத பௌர்ணமியை முன்னிட்டு பெரிய கோவிலில் தென் கைலாய பௌர்ணமி வலம் மங்கள இசை, மயிலாட்டத்துடன் துவங்கிய‌து.

பௌர்ணமி வலத்தில் கலந்து பக்தர்களின் வசதிக்காக அதிக குடிநீர் வசதி, பிரசாதம், காலணி வைக்க தனியிடம், ஆம்புலன்ஸ், தீயணைப்பு என எக்கச்சக்கமான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.‌ முக்கியமாக தஞ்சை பெருவுடையார் கோவிலில் கார்த்திகை தீப விழாவை ஒட்டி சொக்கப்பனை நிகழ்வும் பௌர்ணமி வலமும் ஒரே நாளில் வந்ததால் பௌர்ணமி வலத்தில் கலந்து கொண்ட பக்கத்தில் சொக்கப்பனை நிகழ்வை கலந்து கொண்டு ஜோதி ரூபத்தில் தெரியும் சிவபெருமானை வழிபட்டனர்.

What do you think?

பாபநாசம் அருகே இளங்கார்குடி அம்மன் கோயில் வீடுகளை சூழ்ந்த மழைநீரை வெளியேற்ற கிராம மக்கள் கோரிக்கை

நெல்லை வள்ளியூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் கார்த்திகை மாத தெப்ப உற்சவம்