மழை வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு போதிய நிவாரணம் வழங்கப்படவில்லை நாகை மாலி குற்றச்சாட்டு
தமிழ்நாட்டில் மழை வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு போதிய நிவாரணம் வழங்கப்படவில்லை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூட்ட மாநாட்டில் பங்கேற்ற சட்டமன்ற கொறடா நாகை மாலி குற்றச்சாட்டு.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மயிலாடுதுறை மாவட்ட 24 வது மாநாடு இரண்டு நாட்கள் நடைபெற்றது. மாநாட்டை கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கே பாலபாரதி தொடங்கி வைத்தார்.
மாவட்டச் செயலாளர் பி சீனிவாசன் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
நிகழ்ச்சியில் மாநில செயற்குழு உறுப்பினர் கே சாமுவேல் ராஜ் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் பங்கேற்றனர். தொடர்ந்து புதிய மாவட்ட செயலாளர் தேர்வு மற்றும் மாவட்ட குழு, மாவட்ட செயற்குழு தேர்வு செய்யப்பட்டது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் புதிய மருத்துவக் கல்லூரி உடனடியாக அமைத்திட வேண்டும், மீனவர் நலவாரிய செயல்பாட்டை முழுமையாக அமைக்க வேண்டும், புதிய பேருந்து நிலையம் புறவழிச்சாலை பணிகளை விரைந்து முடித்திட வேண்டும் என்பன வெளியிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற கொறடாவும், மாநில குழு உறுப்பினருமான நாகை.மாலி கூறும்பொழுது தமிழ்நாட்டில் சமீபத்தில் பெய்த மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் தமிழக அரசு வழங்கவில்லை என்று குற்றம் சாட்டினார் மேலும் தமிழகத்திற்கு உரிய நிவாரணத்தை மத்திய அரசு வழங்காமல் வஞ்சித்து வருவதாக அவர் தெரிவித்தார்.