in

விமானம் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பாலாலய பூஜைகள் நடைபெற்றது

விமானம் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பாலாலய பூஜைகள் நடைபெற்றது

 

பழனி கோவிலின் உபகோவிலான அருள்மிகு மாரியம்மன் கோயிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பாலாலய பூஜைகள் நடைபெற்றது.

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் முக்கிய உப கோயில் அருள்மிகு மாரியம்மன் கோயில். இக்கோயிலில் மார்கழி திருவிழா, மாசி திருவிழா என பல்வேறு விசேஷங்கள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம்..

இக்கோயிலில் இன்று விமானம் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பாலாலய பூஜைகள் நடைபெற்றது. நேற்று இரவு சிறப்பு யாகசால பூஜை அமைக்கப்பட்டு பிரதானமாக கலசம் வைக்கப்பட்டு மேளதாளம் முழங்க கால் ஊன்றுதல் நடைபெற்றது. இன்று காலை விநாயகர் ஹோமம்,வாஸ்து ஹோமம் நடத்தப்பட்டு கோ பூஜை நடைபெற்றது.

கோபுரம் படத்துக்கு கண்ணாடி முன் வைக்கப்பட்டு அம்பாள் மந்திரம் ஓதப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து கோபுர பணிகள் ஆரம்பிக்கப்பட்டது. நிகழ்ச்சி இணை ஆணையர் மாரிமுத்து உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

மாசி திருவிழாவிற்கு முன்னதாக பணிகள் நிறைவுபெறும் என திருக்கோயில் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

What do you think?

மழை வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு போதிய நிவாரணம் வழங்கப்படவில்லை நாகை மாலி குற்றச்சாட்டு

நாங்குநோி வானமாமலைப் பெருமாள் திருக்கோவிலில் திருக்கார்த்திகை வைகானசதீபம்