in

நாங்குநோி வானமாமலைப் பெருமாள் திருக்கோவிலில் திருக்கார்த்திகை வைகானசதீபம்

நாங்குநோி வானமாமலைப் பெருமாள் திருக்கோவிலில் திருக்கார்த்திகை வைகானசதீபம்

 

நாங்குநோி வானமாமலைப் பெருமாள் திருக்கோவிலில் திருக்கார்த்திகை வைகானசதீபம் மற்றும் சொக்கப்பனை ஏற்றப்பட்டது. திரளான பக்தா்கள் தாிசனம்.

108 திவ்யதேசங்களில் பாண்டியநாட்டுத் திருப்பதிகளில் ஒன்றான நெல்லை மாவட்டம் நாங்குநோி வானமாமலை பெருமாள் சுவாமி ஸ்ரீ வரமங்கா ஸமேத தெய்வநாயகப் பெருமாள் சன்னதியில் திருக்கார்த்திகை வைகானசதீபத் திருவிழா ஸ்ரீமத் பரமஹம்ஸேத்யாதி மதுரகவி ஸ்ரீ வானமாமலை இராமானுஜ ஜீயா் சுவாமிகள் அனுக்கிகத்துடன் சிறப்பாக நடைபெற்றது.

இதற்காக இன்று இரவில் ஸ்ரீ தெய்வநாயகப் பெருமாள் ஸ்ரீதேவி பூமி தேவியோடு தங்க தோளுக்கிணியான பல்லக்கில் எழுந்தருளினர். ஸ்ரீமடத்தின் முன்பு பெருமாளுக்கு கற்பூர ஆரத்தி காண்பிக்கப்பட்டு ஸ்ரீ மதுரகவி ராமானுஜஜீயர் சுவாமிகளுக்கு மரியாதை செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அர்ச்சகக்கருக்கு மரியாதை செய்யப்பட்டது. திருக்கோயில் முன் அமைக்கப்பட்டுள்ள சொக்கப்பனைக்கு தூப தீபங்கள் காட்டப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. தொடா்ந்து தீபத்தால் சொக்கப்பனை ஏற்றப்பட்டது.

ஒளியில் ஜோதிமயமாக எம்பெருமான் பக்தர்களுக்கு காட்சியளித்தார். பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் இதனைக் கண்டு வணங்கினா்.

இந்த சொக்கப்பனையில் எாிந்த குச்சிகளை எடுத்து வயலில் நட்டு வைத்தால், விவசாயம் செழிக்கும் என்பது இவ்வூர் மக்களின் நம்பிக்கை.

What do you think?

விமானம் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பாலாலய பூஜைகள் நடைபெற்றது

குறுக்குத்துறை முருகன் கோயில் முற்றிலும் மூழ்கிய நிலையில் கோவில் வெளியே தெரிகிறது