குறுக்குத்துறை முருகன் கோயில் முற்றிலும் மூழ்கிய நிலையில் கோவில் வெளியே தெரிகிறது
நெல்லை தாமிரபரணி ஆற்றில் கடந்த மூன்று தினங்களாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் குறுக்குத்துறை முருகன் கோயில் முற்றிலும் மூழ்கிய நிலையில் இன்று ஆற்றில் வெள்ளப்பெருக்கு குறைந்த நிலையில் கோவில் வெளியே தெரிகிறது…
நெல்லை மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகள் தொடங்கி மாவட்டம் முழுவதும் பரவலாக பெய்த கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
ஆற்றங்கரையில் அமைந்துள்ள குறுக்குத்துறை முருகன் கோவில் வெள்ள நீரில் முழுவதுமாக மூழ்கியது. முன்பாக கோவில் உற்சவர் சிலை அருகில் இருக்கும் மேலக் கோவிலில் கொண்டு வைக்கப்பட்டு பூஜை செய்யப்படுகிறது. கடந்த இரண்டு நாட்களாக மழை வெள்ளத்தில் முருகன் கோவில் மூழ்கி இருந்தது.
இன்று தாமிரபரணி ஆற்றில் வெள்ளநீர் வடிந்து வருவதினால் பொதுமக்கள் சகஜ நிலைக்கு திரும்பி தாமிரபரணி ஆற்றில் நீராடி வருகின்றனர். வெள்ளத்தில் மூழ்கி இருந்த குறுக்குத்துறை முருகன் கோவில் வெளியே தெரிய ஆரம்பித்துள்ளது. இருப்பினும் கோவிலுக்கு செல்லும் வழி முழுவதும் மழை வெள்ளம் குறையாததால் கோவிலுக்குள் செல்ல முடியாது.
குறிப்பாகதாமிரபரணி ஆற்றில் முக்கிய அணைக்கட்டுகளான பாபநாசம் மணிமுத்தாறு சேர்வலாறு ஆகிய அணைக்கட்டுகளில் உள்ள உபரி நீர் எதுவும் திறக்கப்படாததினால் தாமிரபரணி ஆற்றில் வெள்ள நீர் முழுவதும் குறைந்துள்ளது. கோவில் செல்லும் வழியில் இருந்த மின் கம்பங்கள் அனைத்துமே வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டு துண்டிக்கப்பட்டுள்ளது.
குறுக்குத்துறை முருகன் கோவிலில் உற்சவர் தற்போது மேலக்கோவிலில் வைக்கப்பட்டு ஆராதனைகள் நடைபெற்று வருகிறது.