அருள்மிகு இராஜகோபால சுவாமி கோவிலில் (தனுா் மாதம்) மாா்கழி மாதபிறப்பை முன்னிட்டு கோ பூஜை
அருள்மிகு இராஜகோபால சுவாமி கோவிலில் (தனுா் மாதம்) மாா்கழி மாதபிறப்பை முன்னிட்டு கோ பூஜை. அதனை தொடா்ந்து மாா்கழி மாத திருப்பள்ளி எழுச்சி, திருப்பாவை சாற்றுமுறை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் அமைந்துள்ள பழமையான வைணவ திருத்தலங்களில் ஒன்று ஸ்ரீ அழகிய மன்னார் ராஜகோபாலசுவாமி திருக்கோவில்.
இத் திருக்கோயிலில் மூலவராக ஸ்ரீ வேதவல்லி குமுதவல்லி சமேத வேதநாராயணா் அமா்ந்த திருக்கோலத்திலும், மூல விமானத்தில் ஸ்ரீ தேவி பூதேவி சமேத அழகிய மன்னாா் நின்ற திருக்கோலத்திலும் உற்சவா் ருக்மணி சத்யபாமா சமேத ராஜகோபாலர் என மூன்று திருக்கோலங்களில் பக்தா்களுக்கு அருள்பாலித்து வருகின்றாா்.
இத் திருக்கோவிலில்ஆண்டுதோறும் பல்வேறு உற்சவங்கள் நடைபெற்று வருகின்றன. மாா்கழி மாத பிறப்பை முன்னிட்டு இன்று அதிகாலை 4.00 மணிக்கு நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தாிசனம் கோ பூஜை நடைபெற்றது. கருடன் சன்னதி முன்பு பசுவுக்கும் கன்றுக்கும் பூஜைகள் நடைபெற்றது. புது வஸ்திரம் சாற்றி மாலைகள் அணிவித்து ஸ்ரீசுக்தம் சொல்லி பூக்களால் அா்ச்சனை செய்தனா்.
லட்சுமி அஷ்டோத்திரத்தால் குங்கும அா்ச்சனை நடைபெற்றது. தொடா்ந்து கற்பூர ஆரத்தி காண்பிக்கப்பட்டது. பக்தா்கள் கோமாதாவை வலம் வந்து வணங்கி பசுக்களுக்கு பழம், கீரைகள் வழங்கி வழிபட்டனா்.
தொடா்ந்து பெருமாளுக்கும் ஆழ்வாராதிகளுக்கும் அா்க்யம் ஆசனமம் அா்ச்சனை நடைபெற்று தீபாராதனை நடைபெற்றது. அதனை தொடா்ந்து மாா்கழி முதல் தினமான இன்று திருப்பள்ளிஎழுச்சிமற்றும் ஆண்டாள் அருளிசெய்த திருப்பாவை பாடல்களை பிரபந்ததாரா்கள் பக்தா்கள் பாடினா்.
நிறைவாக சாத்துமுறை தீா்த்த பிரசாத கோஷ்டி விநியோகம் நடைபெற்றது. இந் நிகழ்ச்சிகளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.