in

இந்திய பாரம்பரிய இசையை உலகளவில் எடுத்துச் சென்ற ‘சக்தி’ மறைந்தது…. தப்லா ஜாகிர் ஹுசைன் மறைவு


Watch – YouTube Click

இந்திய பாரம்பரிய இசையை உலகளவில் எடுத்துச் சென்ற ‘சக்தி’ மறைந்தது…. தப்லா ஜாகிர் ஹுசைன் மறைவு

 

உலகப் புகழ் பெற்ற தப்லா (Tabala) மேஸ்ட்ரோ ஜாகிர் ஹுசைன் சான் பிரான்சிஸ்கோவில் உள்ள மருத்துவமனையில் மறைந்தார்.

ஹுசைன் இடியோபாடிக் (idiopathic pulmonary fibrosis,) நுரையீரல் ஃபைப்ரோஸிஸால் ஏற்பட்ட பாதிப்பால் மறைந்தார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

73 வயதா…கும் ஹுசைன் கடந்த இரண்டு வாரங்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தவருக்கு உடல்நிலை மோசமடைந்தது. மும்பையில் பிறந்தவர் இவரது தபேலா கலைஞர்களில் ஒருவரான அல்லா ரக்காவின் மகனாக, ஹுசைனுக்கு மூன்று வயதாக இருக்கும் பொழுது தபேலா கற்றுக் கொடுக்க ஆரம்பித்தார்.

ஹுசைன் ஏழு வயதில் தனது முதல் கச்சேரியை நிகழ்த்தினார், ஜாகிர் உசேன் தனது தந்தையுடன் மேடைக்கு சென்ற, போது ஐந்து ரூபாய் தனது முதல் சம்பளமாக பெற்றார்.

“நான் என் வாழ்க்கையில் நிறைய பணம் சம்பாதித்தேன், ஆனால் அந்த ஐந்து ரூபாய் மிகவும் மதிப்புமிக்கது” என்று ஹுசைன் பெருமையுடன் கூறினார்.

நான்கு கிராமி விருதுகளைப் பெற்றவர், இவர் 2003 ஆம் ஆண்டு பத்மவிபூஷன் விருதையும் பெற்றார். எளிமையான கருவியை கொண்டு உலகளவில் வலுவான குரலாக மாற்றிய, ஹுசைனின் நம்பமுடியாத வேகம், திறமை மற்றும் படைப்பாற்றல் கலாச்சாரங்களை தாண்டி உலகம் முழுவதும் பார்வையாளர்களை மயக்கியது.

அமெரிக்காவில் சான் பிரான்சிஸ்கோ …வில் குடும்பத்துடன் வசித்து வந்த ஜாகிர் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இரவு மறைந்தார்.


Watch – YouTube Click

What do you think?

அருள்மிகு இராஜகோபால சுவாமி கோவிலில் (தனுா் மாதம்) மாா்கழி மாதபிறப்பை முன்னிட்டு கோ பூஜை

ஸ்ரீவில்லிபுத்தூர் கோவில் கருவறைக்குள் நுழைய இளையராஜாவுக்கு அனுமதி மறுப்பு