திருச்சியில் விவசாயிகள் ரயில் மறியல் தரையில் படுத்து போராட்டம்
திருச்சியில் விவசாயிகள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயற்சி- போலீசார் தடுத்தால் தரையில் படுத்து போராட்டம் குண்டு கட்டாக விவசாயிகளை தூக்கி கைது
திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்துக்கு முன்னதாக தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ரயில் மறியல் போராட்டம் அறிவித்துள்ள நிலையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணய சட்டம் கொண்டுவர வேண்டும். விவசாயிகள் பெற்ற கடன் முழுவதையும் தள்ளுபடி செய்ய வேண்டும். மத்திய அரசு இன்சூரன்ஸ் தருவதில்லை ஆகவே இந்த போராட்டம் மத்திய அரசை கண்டித்து நடைபெறும் மறியல் போராட்டத்திற்கு காவல்துறையினர் ரயில் நிலையத்திற்கு உள்ளே விட மறுப்பதால் விவசாயிகள் தரையில் அமர்ந்து தொடர் தர்ணா போராட்டம் நடத்தினர்.
ஒரு கட்டத்தில் விவசாயிகள் தரையில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டதால் காவல்துறை துணை ஆணையர் செல்வகுமார் தலைமையில் ஆய்வாளர்கள் அய்யாக்கண்ணு உள்ளிட்ட விவசாயிகளை குண்டுக்கட்டாக தூக்கி வேனில் ஏற்றி கைது செய்துள்ளனர். பெண்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான விவசாயிகள் அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.