in

தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் ரயில் மறியல் போராட்டம்

தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் ரயில் மறியல் போராட்டம்

 

திருவாரூரில் மத்திய அரசு விவசாயிகள் பெற்ற கடன் முழுமையும் தள்ளுபடி செய்து விவசாயிகள் தற்கொலைகளை தடுத்து நிறுத்த வலியுறுத்தி தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழக காவிரி விவசாயிகள் சங்க திருவாரூர் மாவட்ட தலைவர் சுப்பையின் தலைமையில் திருவாரூர் புதிய ரயில்வே நிலையத்தில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

எர்ணாகுளத்தில் இருந்து காரைக்கால் வரை செல்லும் எக்ஸ்பிரஸ் திருவாரூர் ரயில் நிலையத்தில் இன்று காலை 10:30 மணி அளவில் வந்தடைந்தது ரயிலை மறித்து விவசாயிகள் மத்திய அரசு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணய சட்டம் கொண்டுவர வேண்டும், விவசாயிகள் பெற்ற கடன் முழுமையும் தள்ளுபடி செய்து தற்கொலைகளை தடுத்து நிறுத்திட வேண்டும், எம் எஸ் பி கேட்டு சாகும்வரை பஞ்சாப் மாநிலத்தின் பார்டரில் உண்ணாவிரதம் மேற்கொண்டு உயிருக்கு போராடி வரும் தலைவர் ஜெட் ஜித் சிங் உடன் பேச்சுவார்த்தை நடத்திட வலியுறுத்தி இந்த ரயில் மறியல் போராட்டம் தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் சார்பில் நடைபெற்றது.

இந்த ரயில் மறியல் போராட்டத்தில் மாநிலத் துணைச் செயலாளர் செந்தில்குமார் ஏறாளமானோர் பங்கேற்றனர்.

இந்த ரயில் மறியல் போராட்டத்தினை முன்னிட்டு நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர் பின்பு ரயில் மறியல் செய்த அனைவரையும் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.

இதனால் இன்று புதிய ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது
பேட்டி நடராஜன் மாவட்ட பொருளாளர்.

What do you think?

விஜய்..டிவி..யில் வெளியாகும் 4 புதிய சீரியல்கள்

தஞ்சை ரயில் நிலையத்தில் ரயிலை மறித்து தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை காவல்துறையினர் கைது செய்தனர்.