தவெகவில் இணைவது முக்கியமல்ல உங்களது வீடு மற்றும் அலுவலகங்களில் தமிழக வெற்றிக் கழக இலவச சட்ட மையம் என பெயர்பலகை வைத்து மக்களுக்கான இலவச சட்ட உதவிகளை வழங்க வேண்டும், ஏழை எளிய மக்கள் பாதிக்கப்பட்டால் விஜய் கட்சி இருக்கிறது என்ற நம்பிக்கை வர வைக்க வேண்டும், தலைமை உத்தரவு பெற்று மக்களின் நலன் காக்க பொதுநல வழக்குகளை தொடர வேண்டும் – மாவட்ட தலைவர் கல்லாணை வேண்டுகோள்.
மதுரை அண்ணாநகர் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் தமிழக வெற்றி கழகத்தில் வழக்கறிஞர்கள் இணையும் விழா நடைபெற்றது.
இந்த விழாவில் தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டர்கள், மதுரை வடக்கு மாவட்டம் தலைவர் விஜய் அன்பன் கல்லானை உள்ளிட்டோர் முன்னிலையில் வழக்கறிஞர் விக்னேஷ் தலைமையில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் தமிழக வெற்றி கழகத்தில் தங்களை இணைத்து கொண்டனர்
முன்னதாக கட்சியில் இணைக்கும் நிகழ்ச்சி தமிழ் தாய் வாழ்த்து பாடலுடன் தொடங்கியது.
தமிழக வெற்றி கழகத்தில் இணைந்த வழக்கறிஞர்களுக்கு தமிழக வெற்றிக்கழக கட்சி கொடி சால்வை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது இதனை அடுத்து கட்சியில் இணைந்தவர்களுடன் குழு புகைப்படம் எடுத்துக் கொள்ளப்பட்டது அப்போது 2026 இல் தமிழக முதலமைச்சராக தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயை பொறுப்பேற்க வைக்கும் வகையில் பணியாற்ற வேண்டும் என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்
கூட்டத்தில் விஜய் அன்பன் கல்லானை பேசும்போது;
தவெக வழக்கறிஞர் மக்கள் பிரச்சினையில் துணை நிற்போம் என்ற நம்பிக்கையை மக்கள் மனதில் விதைக்க வேண்டும்.
மக்களுக்கு தேவை மாற்றம், அந்த மாற்றத்தை தலைவர் விஜய் தருவார்.
தவெக வில் போஸ்டர் ஒட்டவோ.., பேனர் வைக்கவோ.., பணம் செலவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. மக்கள் பிரச்சனைக்கு தீர்வு காண முன்வந்து நற்பெயரை சம்பாதித்து தாருங்கள். ஒரு ரூபாய் கூட மக்கள் பிரச்சினைக்கு வாங்காதீர்கள்.
தவெகவில் இணைவது முக்கியமல்ல உங்களது வீடு மற்றும் அலுவலகங்களில் தமிழக வெற்றிக் கழக இலவச சட்ட மையம் என பெயர்பலகை வைத்து மக்களுக்கான இலவச சட்ட உதவிகளை வழங்க வேண்டும், ஏழை எளிய மக்கள் பாதிக்கப்பட்டால் விஜய் கட்சி இருக்கிறது என்ற நம்பிக்கை வர வைக்க வேண்டும், தலைமை உத்தரவு பெற்று மக்களின் நலன் காக்க பொதுநல வழக்குகளை தொடர வேண்டும் – என வேண்டுகோள் விடுத்தார்.