in

சிதம்பரம் அருகே குடும்ப சண்டையால் பெண் தூக்கிட்டு தற்கொலை

சிதம்பரம் அருகே குடும்ப சண்டையால் பெண் தூக்கிட்டு தற்கொலை. மனைவி இறந்ததை அறிந்து வெளிநாட்டில் இருந்த கணவரும் தூக்கிட்டு தற்கொலை. போலீசார் விசாரணை

சிதம்பரம் அருகே உள்ள அத்தியாநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம்(33). இவர் சிங்கப்பூர் நாட்டில் உள்ள ஒரு கம்பெனியில் வேலை செய்து வந்தார். இவரது மனைவி கௌரி(28). இவர்களுக்கு திருமணம் ஆகி 5 ஆண்டுகள் ஆகிறது. 4 வயதில் ஒரு பெண் குழந்தையும், 2 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர்..

இந்நிலையில் கடந்த மாதம் பன்னீர்செல்வம் ஊருக்கு வந்து விட்டு மீண்டும் சிங்கப்பூர் சென்றுள்ளார். நேற்று அத்தியாநல்லூர் வீட்டிலிருந்த கௌரி குடும்ப சண்டையால் திடீரென தனது வீட்டின் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் அறிந்த புதுச்சத்திரம் போலீசார் சம்பவ கிராமத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

பின்னர் கௌரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே மனைவி இறந்ததை அறிந்த பன்னீர்செல்வம், சிங்கப்பூர் நாட்டில் இருந்தபடியே அங்கு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் இவரது குடும்பத்திலும். கிராம மக்கள் மத்தியிலும் பரபரப்பு ஏற்பட்டது..

இந்நிலையில் திருமணம் ஆகி 5 ஆண்டுகளே ஆவதால் வரதட்சணை கொடுமையாக கெளரி இறந்தாரா என்பது குறித்து சிதம்பரம் சப் கலெக்டர் ரஷ்மி ராணி இன்று சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு நேரில் வந்து விசாரணை நடத்தினார். பின்னர் கௌரியின் உறவினர்களிடமும் விசாரணை நடத்தினார்.

இதற்கிடையே வெளிநாட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட பன்னீர்செல்வத்தின் உடல் சொந்த ஊருக்கு வந்த பின்னர்தான் கௌரியின் உடலை பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என அவரது உறவினர் தெரிவித்தனர். இதனால் கௌரியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்படாமல் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

இறப்பதற்கு சில மணி நேரங்கள் முன்பு தங்கள் குடும்பத்தாரிடம் நன்றாக பேசியதாகவும், திடீரென இறந்து விட்டதாகவும், ஏன் இறந்தார்? எதற்காக இறந்தார் என்பது குறித்து எதுவும் தெரியவில்லை என அவர்களது பெற்றோர் கண்ணீர் மல்க தெரிவித்தனர்…

What do you think?

சிதம்பரம் நடராஜர் கோயிலில் புதிதாக வடக்கயிற்றை பக்தர் ஒருவர் கோயிலுக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார்.

புதுச்சேரியில் ஜனவரி 1 ஆம் தேதி முதல் தலைகவசத்தை கட்டாயமாக்க திட்டம்…