in

புதுச்சேரியில் ஜனவரி 1 ஆம் தேதி முதல் தலைகவசத்தை கட்டாயமாக்க திட்டம்…

புதுச்சேரியில் ஜனவரி 1 ஆம் தேதி முதல் தலைகவசத்தை கட்டாயமாக்க திட்டம்…

 

புதுச்சேரியில் ஜனவரி 1 ஆம் தேதி முதல் தலைகவசத்தை கட்டாயமாக்க திட்டம்… பேண்ட் வாத்திய இசை மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு

சாலை விபத்துகளில் இருசக்கர வாகன ஒட்டிகளுக்கு அதிக அளவில் தலையில் அடிப்பட்டு உயிரிழந்து வருகின்றனர். இதனால் புதுச்சேரி போக்குவரத்து பொறியாளர் மற்றும் சாலை பாதுக்காப்பு பிரிவு போலீசார் கடந்த ஒரு வருட காலமாக இருசக்கர வாகன ஒட்டிகளுக்கு தலைகவசம் அணிவதன் முக்கியதுவம் குறித்து பள்ளி கல்லூரி மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தி வந்தனர்.

இதனிடையே புதுச்சேரியில் தலை கவசம் அணிவது கட்டாயம் என அரசு தெரிவித்துள்ள நிலையில் பெரும்பாலான வாகன ஒட்டிகள் தலைகவசம் அணிவதில்லை.

இந்த நிலையில் வருகின்ற 2025 ஜனவரி மாதம் 1 ஆம் தேதி முதல் அனைத்து இருசக்கர வாகன ஒட்டிகளும் தலை கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்றும் தலைகவசம் அணியாத வாகன ஒட்டிகளுக்கு ரூ. ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டும் என போக்குவரத்து காவல் துறையினர் வாய் மொழியாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதனால் அனைத்து இருசக்கர வாகன ஒட்டிகளும் தலைகவசத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து வருகின்ற ஜனவரி 1 ஆம் தேதி முதல் தலைகவசம் அணியும் விதமாக போக்குவரத்து போலீசார் புதுச்சேரி அண்ணா சிலை அருகே பேண்ட் இசை வாசித்தும், வாகன ஒட்டிகளுக்கு துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

மேலும் தலைகவசம் அணிந்து வந்த இருசக்கர வாகன ஒட்டிகளுக்கு போக்குவரத்து முதுநிலை காவல் கண்காணிப்பாளர் பிரவின் குமார் திரிபாதி ரோஜா பூ கொடுத்து பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.

What do you think?

சிதம்பரம் அருகே குடும்ப சண்டையால் பெண் தூக்கிட்டு தற்கொலை

டங்ஸ்டன் ஒப்புதலை ரத்து செய்யும் வரை போராட்டம் தொடரும்