வீடு தேடி சென்று நிவாரண உதவிகள் வழங்கிய தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள்
தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதிக்கு உடபட்ட ஆவணியபுரத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 150 க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு வீடு தேடி சென்று போர்வை மளிகை பொருட்கள் உள்ளிட்ட நிவாரண உதவிகள் வழங்கிய தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள்.
தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் அவர்களின் உத்தரவின்படி பொதுச்செயலாளர் ஆனந்த் அவர்களின் அறிவுரையின்படி மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு தமிழகம் முழுவதும் நலத்திட்ட உதவிகள் மற்றும் நிவாரணங்கள் வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதி திருவிடைமருதூர் வடக்கு ஒன்றிய தமிழக வெற்றி கழகம் சார்பில் மழை வெள்ளத்தால் பாதிப்படைந்த திருவிடைமருதூர் அருகே ஆவணிபுரம் கீழத்தெருவில் வசிக்கும் 150க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு, எண்ணெய், சர்க்கரை, பிஸ்கெட் உள்ளிட்ட மளிகை பொருட்கள் காய்கறி போர்வை உள்ளிட்ட பொருட்கள் நிவாரணமாக வழங்கப்பட்டது.
ஆவனியாபுரம் கீழத்தெருவில் வசிக்கும் 150 குடும்ப மக்களுக்கு ஒவ்வொரு வீடு ஏறிச் சென்று அவர்களுக்கு நிவாரண உதவி வழங்கி ஆறுதல் கூறினர்.
இந்நிகழ்ச்சியில் வடக்கு ஒன்றிய தலைவர் ஜோதிலிங்கம் தலைமையில் தொகுதி பொறுப்பாளர் வீர விஜயகுமார் முன்னிலையில் திருபுவனம் பேரூர் பொறுப்பாளர் மதுசூதனன், ஆடுதுறை பேரூர் தலைவர் ரகுபதி மற்றும் திருவிடைமருதூர் வடக்கு ஒன்றிய சார்ந்த பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது குறித்து அரசுத்துறை அதிகாரிகள் கணக்கெடுப்பு நடத்தி வரும் நிலையில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கி வரும் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகளின் செயல் மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.