கனமழையால் 500-ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள வாழை மரங்கள் சேதம்
கும்பகோணம் அருகே பாபநாசம் பகுதிகளில் தொடர் கனமழையால் 500-ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள வாழை மரங்கள் முழுவதும் அழுகிய நிலையில் சாய்ந்து சேதம் அடைந்ததுள்ளது விவசாயிகள் வேதனை ….
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பார்வையிட்டு நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை….
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே பாபநாசம் தாலுக்கா நாயக்கர்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 500-ஏக்கரில் விவசாயிகள் வாழை சாகுபடி செய்துள்ளனர்.
இந்நிலையில் சமீபத்தில் பெய்த தொடர் கனமழையினால் நாயக்கர்ப்பேட்டை பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள வாழை மரங்கள் முழுவதும் சாய்ந்து , அழுகிய நிலையில் சேதமடைந்து உள்ளாகவும், தங்கள் வாழ்வாதாரத்தை மீட்டு தர கோரியும், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இதுவரை பார்வையிட வரவில்லை என வாழை சாகுபடி விவசாயிகள் மிகவும் வேதனை தெரிவித்துள்ளனர்.
மேலும் மாவட்ட ஆட்சியர் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பாதிக்கப்பட்ட இடத்தினை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பாதிக்கப்பட்ட வாழை சாகுபடி விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.