திருப்பதி ஸ்ரீ வெங்கடேஸ்வரா வேத பல்கலைக்கழக வளாகத்தில் புகுந்த சிறுத்தை புலி
நள்ளிரவு நேரம். திருப்பதி மலை அடிவாரத்தில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா வேத பல்கலைக்கழக வளாகத்தில் புகுந்த சிறுத்தை புலி. ஊழியர்கள் அதிர்ச்சி.
நேற்று நள்ளிரவு 12 மணி அளவில் திருப்பதி மலை அடிவாரத்தில் இருக்கும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா வேத பல்கலைக்கழக வளாகத்திற்குள் சிறுத்தை புலி ஒன்று புகுந்தது.
திருப்பதி மலை காட்டுப்பகுதியில் இருந்து அங்கு வந்த சிறுத்தை புலி வேத பல்கலைக்கழக வளாகத்திற்குல் புகுந்ததை கவனித்த பாதுகாப்பு ஊழியர்கள் கடும் அதிர்ச்சி அடைந்து வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.
சிறுத்தை புலியின் நடமாட்டம் அந்த பகுதியில் வனத்துறையினர் பொருத்தி இருக்கும் ட்ராப் கேமராவில் பதிவாகியுள்ளது.
வேத பல்கலைக்கழகத்திற்கு நல் இரவு நேரத்தில் வந்த சிறுத்தை புலியை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
சிறுத்தை புலி நடமாட்டம் பல்கலைக்கழக பாதுகாப்பு ஊழியர்கள் மாணவர்கள் ஆகியவருடைய கடும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.