அல்லு அர்ஜுன் கைது… பாடம் புகட்டிய தெலுங்கானா மாநில முதல்வர்…குவியும் பாராட்டுகள்
தெலுங்கு திரை உலகத்திற்கு பாடம் புகட்டி உள்ளார் தெலுங்கானா மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி ….
நடிகர் அல்லு அர்ஜுன் தனது சமீபத்திய படமான புஷ்பா 2: தி ரூல் படத்தின் பிரீமியர் Show…வின் போது நெரிசலில் சிக்கி ரேவதி என்ற பெண் ஒருவர் இறந்தது தொடர்பாகவும் அவரது மகன் இன்னும் கோமாவில் இருப்பதால் ஹைதராபாத் காவல்துறையினரால் அல்லு வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார்.
தெலுங்கானா உயர் நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியதை அடுத்து, டோலிவுட் சூப்பர் ஸ்டார் ஒரு நாள் கழித்து, சனிக்கிழமையன்று சிறையில் இருந்து வெளியேறினார்.
ஹைதராபாத் நீதிமன்றம் அவரை 14 நாள் நீதிமன்றக் காவலில்/ வைக்க உத்தரவு பிறப்பித்த போதும் வெள்ளிக்கிழமை இரவு மட்டும் உள்ளூர் சிறையில் கழித்ததாகக் கூறப்படுகிறது.
உயர் நீதிமன்றத்தின் ஜாமீன் உத்தரவு இருந்தபோதிலும், ஜாமீன் உத்தரவின் நகல் அதிகாரிகளுக்கு கிடைக்காததால், அவர் சஞ்சல்குடா சிறையில் ஒரு இரவைக் கழிக்க வேண்டியநிலை ஏற்பட்டது. இதற்கிடையில், அல்லு அர்ஜுன் மனைவி சினேகா ரெட்டியின் உறவினரான தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தின் பக்கம் தான் இருந்ததாகவும் , யாராக இருந்தாலும் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படப்படும் என்றும் உறுதியாகக் கூறினார்.
கைது தொடர்பான சர்ச்சை..க்கு விளக்கம் அளித்த அவர், சினேகா ரெட்டியின் தூரத்து உறவினராக இருந்தால் என்ன “அவர் வெறும் நடிகர். பாகிஸ்தானுடன் போர் செய்து இந்தியாவுக்கு வெற்றிவாங்கி தந்தாரா? அவர் ஒரு படம் தயாரித்து, பணம் சம்பாதித்து வீட்டிற்குச் எடுத்து சென்றார்,” என்று முதல்வர் ரெட்டி கூறினார்.
முதல்வர் ரேவந்த் ரெட்டி …யின் செயல் வரவேற்க தக்க நடவடிக்கை என்று பலர் பாராட்டுகளை தெரிவித்துவருகின்றனர். அல்லு அர்ஜுன் கைதாகி வெளியே வந்த உடன் அவரை பார்க்க பல நடிகர்கள், ரசிகர்கள், உறவினர்கள் என்று வீட்டுக்கு முன்பு கூடிவிட்டனர்.
ஆனால் இறந்த ரேவதியின் குடும்பத்தையோ கோமாவில் இருக்கும் அவரது மகனை சந்திக்கவோ இதுவரை எந்த நடிகர்களும் செல்லவில்லை என்பது வருத்தமே.