in

திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திருவிழாவை ஒட்டி கடந்த 13ம் தேதி அன்று மலை உச்சியில் தீபம் ஏற்றப்பட்டு தீபத்திருவிழா கோலாகலமாக நடைபெற்றது

திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திருவிழாவை ஒட்டி கடந்த 13ம் தேதி அன்று மலை உச்சியில் தீபம் ஏற்றப்பட்டு தீபத்திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. வழக்கமாக கார்த்திகை தீபத்திருவிழாக்களின்போது, சுமார் இரண்டாயிரம் பேர் வரை திருவண்ணாமலை மலை மீது ஏற அனுமதிக்கப்படுவர். ஆனால், இந்த முறை வடகிழக்குப் பருவமழை தீவிரத்தாலும், ஃபெஞ்சல் புயலின் கோரத்தாண்டவத்தாலும் திருவண்ணாமலையில் அதிகனமழை கொட்டித் தீர்த்தது.

இதில், மலை மீது பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. குறிப்பாக மலையடிவாரத்தில் வ.உ.சி நகர் பகுதியில் ஏற்பட்ட மண் சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து திருவண்ணாமலையில் பெய்த தொடர் மழையால் மலையின் மேற்பகுதி மிகுந்த ஈரப்பதத்தோடு வழுவழுப்பாக காணப்பட்டதால், மலை மீது ஏற பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இந்த நிலையில், அனுமதி மறுக்கப்பட்டபோதிலும், ஆந்திர மாநிலம் விஜயவாடாவை சேர்ந்த அன்னபூர்ணா என்பவர் அத்துமீறி மலை மீது ஏறியுள்ளார். 2,669 அடி உயரம் கொண்ட மலையில், சுமார் 2000 அடி வரை ஏறிய 55 வயதான அன்னபூர்ணா, கீழே இறங்க வழி தெரியாமல் 2 நாட்களாக தவித்துள்ளார்.

இதையடுத்து, வனத்துறையினருக்கு வந்த தகவலின் அடிப்படையில் மலைமீது சிக்கிய அன்னபூர்னாவை, பத்திரமாக மீட்ட வனக்காப்பாளர் ராஜேஷ், அவரை தனது முதுகில் சுமந்தவாறு மலையடிவாரத்திற்கு அழைத்துவந்தார். தொடர்ந்து, மருத்துவமனையில் அனுமதித்து அவருக்கான முதலுதவி ஏற்பாடுகளையும் செய்துகொடுத்துள்ளார் ராஜேஸ். அத்துமீறி மலை ஏறி, 2 நாட்களாக தவித்துவந்த பெண்மணியை பத்திரமாக மீட்ட வனக்காப்பாளருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது…

What do you think?

நாக்கை இரண்டாக பிளந்து டாட்டூ போட்டு பாம்பு போல் நீட்டி இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட இளைஞர் உள்ளிட்ட இருவர் கைது

ஸ்ரீ ரமண பகவானின் 145 – வது ஜெயந்தி விழா…