in

சொத்துக்காக பெற்ற தாயை குத்திக் கொன்ற மகன் மற்றும் தந்தை ஆகிய இருவருக்கு ஆயுள் தண்டனை

சொத்துக்காக பெற்ற தாயை குத்திக் கொன்ற மகன் மற்றும் தந்தை ஆகிய இருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து மயிலாடுதுறை நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு 

மயிலாடுதுறை மாவட்டம், மணல்மேடு அருகே கிடாத்தலைமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் செல்லம்மாள். இவரது கணவர் சுப்பிரமணியன் இவரை பிரிந்து வெளியூர் சென்றுவிட்ட நிலையில், பூர்விக சொத்துகளைக் கொண்டு பிள்ளைகளை காப்பாற்றி வந்தார். இந்நிலையில் கடந்து 2016 ஆம் ஆண்டு இவரிடம் சொத்து குறித்து இவரது கணவர் சுப்பிரமணியன் மற்றும் இவரது இளைய மகன் ராமலிங்கம் ஆகியோர் பிரச்சனை செய்து வந்திருந்தனர். இதனைத் தொடர்ந்து 2016 ஆம் ஆண்டு கிராமத்தில் இருந்த அவரை செல்லம்மாளின் கணவர் சுப்பிரமணியன் பிடித்துக் கொள்ள, பெற்ற மகன் ராமலிங்கம் கத்தியால் குத்தினார். இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இந்த கொலை வழக்கு தொடர்பாக மணல்மேடு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு மயிலாடுதுறை செஷன்ஸ் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது வழக்கின் விசாரணை நிறைவடைந்து இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

மாவட்டம் முதன்மை மற்றும் அமர்வு நீதிபதி விஜயகுமாரி தீர்ப்பு வழங்கினார். தீர்ப்பில் குற்றம் சாட்டப்பட்ட ராமலிங்கம் மற்றும் சுப்பிரமணியன் ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினார் மேலும் 2000 ரூபாய் அபராதம் விதித்தார். இதனைத் தொடர்ந்து தண்டனை பெற்ற இருவரையும் காவல்துறையினர் பலத்த பாதுகாப்புடன் சிறைச்சாலைக்கு அழைத்துச் சென்றனர்.

What do you think?

ஸ்ரீ ரமண பகவானின் 145 – வது ஜெயந்தி விழா…

சீரமைப்பு பணிகள் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் சி.பழனி ஆய்வு செய்தார்