in

சீரமைப்பு பணிகள் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் சி.பழனி ஆய்வு செய்தார்

சீரமைப்பு பணிகள் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் சி.பழனி ஆய்வு செய்தார்

 

விழுப்புரம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் சி.பழனி காணை மற்றும் முகையூர் ஊராட்சி ஒன்றியங்களில் கனமழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதை நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

விழுப்புரம் மாவட்டம், காணை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஆரியூர் ஊராட்சி, மல்லிகைப்பட்டு ஊராட்சி, முகையூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சென்னாகுணம் ஊராட்சி, சத்தியகண்டனூர் ஊராட்சி, காரணை பெரிச்சானூர் ஊராட்சி ஆகிய பகுதிகளில் கனமழை வெள்ளத்தினால் பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் சி.பழனி நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவிக்கையில், காணை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஆரியூர் ஊராட்சியில், கனமழை வெள்ளத்தினால், பம்பை ஆற்றுக்கு உபரிநீர் செல்லும் ஏரியின் கரைப்பகுதி சேதமடைந்துள்ளதை நேரில் பார்வையிட்டு, கரைப்பகுதி பலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதை தேரில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும், ஆரியூர் ஊராட்சியில் பம்பை ஆற்றின் குறுக்கே உள்ள தரைப்பாலம் உயர்மட்டப்பாலமாக அமைப்பது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

தொடர்ந்து, மல்லிகைப்பட்டு ஊராட்சியில், கனமழை வெள்ளத்தினால் பம்பை ஆற்றின் குறுக்கே உள்ள பாலத்தின் கரைப்பகுதியில் இருபுறமும் உடைப்பு ஏற்பட்டதைதொடர்ந்து, மணற்மூட்டைகள் கொண்டு கரை அரிப்பினை தடுக்கும் வகையில் கரை பலப்படுத்தும் பணிகள் நடைபெற்றுவருவதை நேரில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மேலும், நிரந்தரமாக இருபுறமும் கரைகள் அமைப்பது தொடர்பாகவும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, முகையூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சென்னாகுணம் ஊராட்சியில், கனமழை வெள்ளத்தினால் சென்னாகுணம் ஏரி உடைப்பு ஏற்பட்டு ஆயந்தூர் காரணை ஊராட்சிகளுக்கு

செல்லும் சாலை சேதமடைந்ததை தொடர்ந்து, தற்காலிகமாக 2035 மீட்டர் நீளத்திற்கு சாலை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதையும், ஏரியின் கரைப்பகுதி தற்காலிகமாக சீரமைக்கப்பட்டு வருவது குறித்தும் நேரில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மேலும், முகையூர் கண்டாச்சிபுரம் செல்லும் சாலையில் உள்ள சத்தியகண்டனூர் ஊராட்சியில், கனமழைவெள்ளத்தினால் 100 மீட்டர் அளவிற்கு கிராம சாலை சேதமடைந்ததை தொடர்ந்து, தற்காலிகமாக சாலை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதையும், அப்பகுதியில் உள்ள பாலத்திற்கு பதிலாக புதியபாலம் அமைப்பது தொடர்பாகவும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மேலும், காரணை பெரிச்சானூர் ஊராட்சியில், கனமழை வெள்ளத்தினால் சேதமடைந்த சாலைகள், தற்காலிகமாக சீரமைக்கப்பட்டு வருவதையும், நீர்வரத்து வாய்க்கால் உடைப்பு ஏற்பட்டு சீரமைப்பு பணிகள் மேற்கொள்வது தொடர்பாக நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் சி.பழனி, தெரிவித்தார்.

ஆய்வின்போது, நிர்வளத்துறை செயற்பொறியாளர் ஷோபனா, ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் ராஜா, நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்டப்பொறியாளர் தன்ராஜ், நிர்வளத்துறை உதவி பொறியாளர் கார்த்திக், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.

What do you think?

சொத்துக்காக பெற்ற தாயை குத்திக் கொன்ற மகன் மற்றும் தந்தை ஆகிய இருவருக்கு ஆயுள் தண்டனை

வைத்தியநாத சுவாமி கோவிலில் இரவு பெய்த கனமழையால் சூழ்ந்த மழை நீர் பக்தர்கள் அவதி…